புறத் தோன்றும், எ-று.
(எ-டு.) இச்சொற்குப் பொருள் யாது? இச்சொற்குப் பொருள் எவன்?
இது,
பொது வகையான் உணரப்பட்டுச்
சிறப்பு வகையான்
உணர்த்தப்படாத பொருளாம். இக்காலத்து ‘எவன்’ என்பது, ‘என்’
என்றும் ‘என்னை’ என்றும் மருவிற்று.
‘யாவன்?
யாவள்? யாவர்? யா? யாவை? யாண்டு? யாங்கு? எப்
பொருள்? என்பன திணை பால் முதலியன உணர்த்தலின், அறியாப்
பொருள்வயின் செறியத் தோன்றாவாயின.
ஆயின், ‘யாது?’ ‘எவன்?’ என்பவற்றிற்கும் அவை உளவால் எனின்,
வினாவுகின்றான் அஃறிணை ஒருமையும்
பன்மையும் துணிந்து
அவற்றின் பகுதி அறிதற்கு வினாவுகின்றான் அல்லன், பொதுவகையான்
வினாவு கின்றான் என்று அறிவுறுக்குமாறு வழக்குநோக்கி உணர்க. (31)
அவற்றுள் யாது என்னும் வினா
32.
அவற்றுள்,
யாதென வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்
தெரிந்த கிளவி யாதலு முரித்தே.
இஃது
அவற்றுள் ஒன்று அறிந்தவழியும் வரும்
என்று அறிந்து
வழுக்காக்கின்றது. எனவே, மரபு கூறிற்றாம்.
(இ-ள்.) அவற்றுள்
யாது என வரூஉம் வினாவின் கிளவி -
அக்கூறப் பட்ட இரண்டனுள் யாது என்னும்
வினாச்சொல் அறியாப்
பொருளை வினாதலே அன்றி அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத்
தெரிந்த கிளவி ஆதலும் உரித்து-அறிந்த பொருட்கண் ஐயந்தீர்தற்கு
ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து, எ-று.
(எ-டு.) நம்
எருது ஐந்தனுள் கெட்ட எருது யாது? என வரும்.
இஃது அறிந்த பொருட்கண் ஐயந்தீர்தலின், வழுவமைதி அன்று.
முன்னிற்சூத்திரத்துள்
‘யாது’ என்பதனை இச்சூத்திரத்தொடு
பொருந்தப் பின் வையாததனான், செறியத்
தோன்றாதனவற்றினும்
வருவன கொள்க.
நமருள் யாவன்
|