போயினான்? என எல்லாவற்றோடும் ஒட்டுக.
இனி,
‘கடிசொல் இல்லை’ (452) என்பதனான்,
நமருள் எவன்
போயினான்? அவற்றுள் எவ்வெருது கெட்டது? என்பனவுங் கொள்க,
உம்மை
எதிர்மறை ஆகலான், ஐயத்ததாய் நிற்றல் வலியுடைத்து.
(32)
முற்றும்மை வருமிடன்
33.
இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்.
இதுவரையறையுடையது
தொகை பெறும்வழிப் படுவதொரு மரபு
கூறுகின்றது.
(இ-ள்.)
இனைத்தென அறிந்த சினை
முதல் கிளவிக்கு -
கேட்போரான் இத்துணை என்று அறியப்பட்ட
சினைக்கிளவிக்கும்
முதற்கிளவிக்கும், வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்-முடிக்கும்
சொல்லொடுபடும் தொகுதிக்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக, எ-று.
(எ-டு.) நம்பி கண் இரண்டும் நொந்தன; தமிழ் நாட்டு மூவேந்தரும்
வந்தார்; எனச் சினை முதற்கிளவிகள்
தாமே வினைப்பட்டமையின்,
உம்மை வேண்டின.
‘பன்னிரு
கையும் பாற்பட இயற்றி’ (முருகு. 118) இது பிறவினைப்
படுத்தினது.
‘முரசுமுழங்கு
தானை மூவரும் கூடி’ (பொருந. 54) இது தானே
வினைப்பட்டது. பன்னிரண்டென்னும் தொகுதியும்
கையும் ‘இயற்றி’
என்பதன்மேல் வருதலின், ‘கை என்பதனோடு
இயைந்த ‘இயற்றி’
என்னும் வினை தொகைப்பெயரோடும் இயைந்ததாம். ‘ஐந்தலை நாகம்
உடன்றது,’ என்பதற்கு ‘நாகம்’ வினைப்படு தொகுதி அன்று, முடிக்குஞ்
சொல் அன்மையின். இனிக் ‘கண்ணிரண்டும் குருடு; எருது இரண்டும்
மூரி; எனப் பெயர் கொண்டவழிப் பெயரும் முடிக்குஞ் சொல்லேயாம்.
‘சுவை ஆறும் உடைத்து இவ்வடிசில்; கதி ஐந்தும் உடைத்து இக்குதிரை;
எனச் சிறவாத பண்பு முதலியனபற்றி வருவனவுங் கொள்க.
‘இருதோள் தோழர் பற்ற’ என்பது பிற
|