நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   506
Zoom In NormalZoom Out


றரான் வினைப்படுக்கப்பட்டது. இதற்கு உம்மை விகாரத்தான் தொக்கது,
செய்யுளாதலின்.  இத்துணை  என்று  அறியாக்கால்,  ‘முருகற்குக்  கை
பன்னிரண்டு,’  என்று  உம்மை  பெறாதாம்.   ‘ஒண்குழை ஒன்றொல்கி
எருத்தலைப்ப’  என்பது, ஒன்றேனும், இனைத்தென அறிதலின் உம்மை
வேண்டும்; அது, விகாரத் தான் தொக்கது. (33) 

நிலையாப் பொருளும் எச்சவும்மை பெறுதல்

34. மன்னாப் பொருளும் அன்ன இயற்றே. 

இது நிலையாப் பொருட்கண் மரபு நிகழ்த்துமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)  மன்னாப்   பொருளும்  -   உலகத்து   நிலை  இல்லாத
பொருளும்,  அன்ன  இயற்று  -  அதுபோல  உம்மை  கொடுத்துக் -
கூறுதல் வேண்டும், எ-று. 

‘பொருளும்’   என்ற   எச்ச   உம்மையான்,   உலகத்து  இல்லாத
பொருளும்,  இடமும் காலமும் பொருளும் முதலியனவற்றொடு படுத்துக்
கூறுதற்  கண்  உம்மை கொடுத்துக் கூறுதல் வேண்டும் என்று பொருள்
உரைத்துக் கொள்க. 

‘யாக்கையும் நிலையாது,’ எனவே, ‘இளமையும் செல்வமும் நிலையா’,
என்னும்   பொருளும்  உணர்த்தி  எச்ச உம்மையாய் நிற்கும். உம்மை
பெறுதல்     ஒப்புமையான்,     முற்றும்மையோடு    எச்சஉம்மையை
மாட்டெறிந்தார். 

இனிப்  ‘பவளக்கோட்டு  நீல  யானை சாதவாகனன் கோவிலுள்ளும்
இல்லை;   குருடு   காண்டல்   பகலும்  இல்லை;  ‘உறற்பால  நீக்கல்
உறுவர்க்கும்  ஆகா’  (நாலடி 104)  என,   இல்லாப்   பொருள்களும்
எச்சஉம்மை  பெற்றவாறு  காண்க.  இடம் முதலியவற்றொடு வாராதவழி
உம்மை பெறா. 

* ‘மன்னுக  பெருமநீ  நிலமிசை யானே.’ (புறம். 6:29) எனவும், ‘மன்னா
உலகத்து   மன்னுதல்   குறித்தோர்’  (புறம். 165:1)  எனவும், ‘மன்னாப்
பொருட்பிணி  முன்னி’  (நற். 71)  எனவும் மன்னாமை நிலையாமையை
உணர்த்து