நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   508
Zoom In NormalZoom Out


று   வருமாறும்   உணர்க.   ‘அவன்  அல்லது  பிறன் இல்லை,’ என
மேல்வருஞ் சொல்லொடு படுத்து வழுவமைதியாதல் அறிக. 

பயற்றான்  முடிக்கும்  குறை உழுந்தான் முடித்தலன்றிப் பாம்புணிக்
கருங்கல்லான் முடித்தல் ஆகாமையின், ‘பயறு உளவோ?’ என்றார்க்குப்
‘பாம்புணிக்   கருங்கல்   அல்லது   இல்லை,’ என்றல் பொருந்தாமை
உணர்க.
                                                (35)

மேலதற்கு ஒரு புறனடை

36. அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல். 

இது  மேலதற்கு  ஒரு  புறனடை  ஆயதொரு  இறுத்தல் வகைமை
கூறுகின்றது. 

(இ-ள்.) அப்பொருள்  கூறின்  -  அல்லது  இல்  என்பான் பிறிது
பொருள்  கூறாது  அப்பொருடன்னையே கூறுமாயின், சுட்டிக் கூறல் -
முன்னர்க் கிடந்த பொருளைச் சுட்டிச் சொல்லுக எ-று. 

‘இவை  அல்லது  இல்லை; இப்பயறு அல்லது இல்லை,’ என வரும்.
வினாயினான்  பயற்றின்  நன்மையும்  தீமையும் உணர்ந்து, கோடற்கும்,
தவிர்தற்கும்  இவ்வாறே  கூறுக  என்றார்.  சுட்டாது,  ‘பயறு  அல்லது
இல்லை,’  எனின், ‘பயறு உள, உழுந்து முதலிய இல்லை’, எனப் பிறிது
பொருள் ஏற்பித்துச் செப்புவழுவாம். 

‘தன்னினம்  முடித்தல்’ என்பதனால், ‘பெரும்பயறு அல்லது இல்லை;
பசும்பயறு அல்லது இல்லை,’ எனக் கிளந்து கூறுதலுங் கொள்க. (36) 

சுட்டுப்பெயர் பொருட்பெயராய் உணர்த்துமாறும்,

சுட்டுப்பெயர் அமையுமாறும்

37. பொருளொடு புணரச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே.
 

இது, திணைவழு அமையுமாறும், ஒரு பொருட்பெயர் சுட்டாய் நின்று
அப்பொருள் உணர்த்துவதொரு மரபு வழுவமைதியும் உணர்த்துகின்றது.

(இ-ள்.) சுட்டு  பொருளொடு புணரா ஆயினும் ஆகும்-ஒரு சுட்டுத்
தான்   உணர்த்துதற்கு   உரிய  அஃறிணைப்பொருளை  உணர்த்தாது
உயர்திணைப்பொருளை   உணர்த்தி   நிற்குமாயினும்  ஆம்,   பெயர்
பொருளொடு புணரா ஆயினும் சுட்டுப்பொ