ருள் வேறுபடாது
ஒன்றாகும் - சில பெருட்பெயர் சுட்டுப்பொருளை
உணர்த்தா ஆயினும் தாம் சுட்டுவதொரு
பொருளிடத்து வேறுபட
நில்லாமல் அப்பொருளையே உணர்த்தி நிற்கும் எ-று.
‘இஃது ஒத்தன்,’
(கலி 84:18) என்றவழி, ‘இஃது’ என்ற அஃறிணைப்
பொருளை உணர்த்திய சுட்டு ‘இவன்
ஒருத்தன்’ என உயர்திணைப்
பொருளை உணர்த்தி நின்றவாறு காண்க. ‘இஃதோ செல்வற்-கொத்தனம்
யாமென’ (அகம்.26:19,20) என்பதும் அது.
‘நாயுடைமுதுநீர்’
(அகம்.16) என்னும் அகப்பாட்டினுள்,
‘நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினென் அல்லனோ மகிழ்க! வானத்
தணங்கருங் கடவுளன் னோள்நின்
மகன்தாய் ஆதல்* புரைவதாங் கெனவே.’
என்புழி ‘நாணி
நின்றோள்’ என்னும் பொருட்பெயர் தன் தொடர்ப்
பொருளைக்கொண்டு முடிந்த பின்னர், அப்பொருட்பெயர்மேல் ஒரு
காரியம் கூற வேண்டியவழி, ‘அவள்’ எனச் சுட்டிக் கூறுதல் வேண்டும்;
அங்ஙனம் கூறாது, ‘வானத் தணங்கருங்
கடவுளன்னோள்’ என
எல்லார்க்கும் பொதுவாயதொரு பெயரான்
கூறினாள். ஆயினும்,
கூறுகின்றாள் பரத்தையைக் கருதியே கூறுதலின், அக் ‘கடவுளன்னோள்’
என்ற பெயரும் சுட்டுப் பெயர்த்தன்மையாய் நின்றவாறு காண்க.
‘அளிநிலை
பொறாஅது, (அகம். 5) என்னும்
அகப்பாட்டினுள்,
‘ஒண்ணுதல் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு விழந்த - தோற்றம்
கண்டே கடிந்தனம்,’ என முடித்த பின்னர் அவள்மேல் பின்னரும் ஒரு
காரியம் கூறக் கருதிய தலைவன், ‘ஒண்டொடி’ எனப்
|