கொள்ளாது இரண்டும்
பிறிது வினை கோடற்கு ஒருங்கு நிகழுங்காலம்
தோன்றுமாயின், சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக்கிளவார்-உலகத்தார்
சுட்டுப் பெயராகிய சொல்லை முற்படக் கிளவார், இயற்பெயர் வழிய
என்மனார் புலவர் - இயற்பெயர்க்குப்
பின்னாகக் கூறுவர் என்று
சொல்லுவர் புலவர், எ-று.
‘ஒருங்கியலும்’ என்றதனான், ஒரு பொருளை உணர்த்துதல் கொள்க.
‘வழிய’ என்றதனான், இயற்பெயர்வழி நிற்றற்குரிய அகர இகரச் சுட்டே
கொள்க.
சாத்தன்
வந்தான், அவற்குச் சோறு கொடுக்க; சாத்தி வந்தாள்,
அவட்குப் பூக்கொடுக்க என வரும்.
‘அவன் வந்தான்’,
சாத்தற்குச் சோறு கொடுக்க’ எனின், அவனும்
சாத்தனும் வேறுவேறாய், அவன் வருந்துணையுஞ் சாத்தன் சோறு பெறா
திருந்தானாவான் செல்லும்; அங்ஙனங் கூறற்க.
இனி, ‘இயற்பெயர்
வழிய’ என்ற மிகையான்,இயற்பெயர் அல்லா
உயர் திணைப் பெயர்க்கும் அஃறிணைப் பெயர்க்கும் சுட்டுப்பெயர் பின்
வருதல் கொள்க.
நம்பி
வந்தான், அவற்குச் சோறு கொடுக்க;
நங்கை வந்தாள்,
அவட்குப் பூக்கொடுக்க; எருது வந்தது, அதற்குப் புல் இடுக; குதிரை
வந்தது, அதற்கு முதிரை கொடுக்க என வரும்.
‘தன்னினம்
முடித்தல்’ என்பதனான், விரவுப் பெயருள் இயற்பெயர்
ஒழிந்தனவுங் கொள்க.
முடவன்
வந்தான், அவற்குச் சோறு கொடுக்க; முடத்தி வந்தாள்,
அவட்குக் கூறை கொடுக்க என வரும்.
‘வினைக்கு
ஒருங்கியலும்’ என்று வினை கூறுதலாற்
பெயர்க்கு
ஒருங்கு இயலாது முன்கூறினும் அமைக என்பதாம்.
(எ-டு.) சாத்தன் அவன்; அவன் சாத்தன் என வரும். (38)
எய்தியது விலக்கல்
39. முற்படக் கிளத்ததல் செய்யுளுள் உரித்தே.
இஃது எய்தியது விலக்கிற்று.
(இ-ள்.) முற்படக்
கிளத்தல் - இயற்பெயருஞ் சுட்டுப்பெயரும்
வினைக்கு ஒருங்கியலும் வழிச் சுட்டுப்
|