பெயரை முற்கூறுதல், செய்யுளுள் உரித்து-செய்யுளிடத்து உரித்து, எ-று.
(எ-டு.)
‘அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய்! வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந்
தன்னை அலர்கடப்பந் தாரணியின் என்னைகொல்
பின்னை யதன்கண் விளைவு.’
(நன்.சூ.394உரை)
சேந்தன், இயற்பெயர். (39)
சுட்டு முதலாகிய காரணக்கிளவி
40.
சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெய ரியற்கையின் செறியத் தோன்றும்.
இதுவும் அச்சுட்டு ஆராய்ச்சியே கூறுகின்றது.
(இ-ள்.)
சுட்டு முதலாகிய காரணக் கிளவியும்
- சுட்டுப்பெயர்
முதலாகிய காரணப்
பொருண்மையை உணர்த்தும் சொல்லும்,
(உம்மையான்
காரணமின்றி, வருஞ்
சுட்டுப்பெயரும்), சுட்டுப்பெயர்
இயற்கையின்
செறியத் தோன்றும் - சுட்டுப்பெயர் போலத் தன்னாற்
சுட்டப்படும்
தொழிலை உணர்த்துஞ் சொற்குப் பின் கிளக்கப்படும்,
எ-று.
‘சுட்டுப்பெயர்
இயற்கை’ எனவே, வழக்கிற்குப் பின்னுஞ் செய்யுட்கு
முன்னும் நிற்குமென்பது பெற்றாம்.
‘சாத்தன்
கை எழுதுமாறு வல்லன்’, அதனான் தந்தை உவக்கும்;
சாத்தி
சாந்து அரைக்குமாறு வல்லள், அதனாற்
கொண்டவன்
உவக்கும் - இவற்றுள் சுட்டு
முதலாகிய காரணக்கிளவி உருபன்று;
உருபேற்ற
சுட்டுப் பெயரோட ஒப்பதோர் இடைச்சொல்; என்னை?
பிளவுபடாது ஒன்று பட்டு இசைத்தலின்.
‘சாத்தன்
வந்தான், அஃது அரசற்குத் துப்பு ஆயிற்று; கிழவன்
பிரிந்தான்,
அதனைக் கிழத்தி உணர்ந்திலள்-என இவை காரணமின்றி
வந்தன. (40)
இயற்பெயரும் சிறப்புப்பெயரும் அமையுமாறு
41.
சிறப்பி னாகிய பெயர் நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.
இதுவும் ஒரு பொருளை உணர்த்தும் இருபெயர்
வழுக்காக்
|