நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   513
Zoom In NormalZoom Out


கின்றது. 

(இ-ள்.) சிறப்பினாகிய   பெயர்நிலைக்   கிளவிக்கும்  - வினைக்கு
ஒருங்கியலும்வழிச்  சிறப்பினாகிய  பெயராய் நிற்றலையுடைய சொற்கும்
(உம்மையான்,  தவம்,  கல்வி,  குடி,  உறுப்பு  முதலியவற்றான் ஆகிய
சொற்கும்),  இயற்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்  -   இயற்கைப்
பெயராகிய  சொல்லை உலகத்தார் முற்படக்கிளவார், பிற்படக்கிளப்பார்,
எ-று. 

சிறப்பு, மன்னர் முதலியோரான் பெறும் வரிசை. 

(எ.டு.) ஏனாதி  நல்லுதடன், முனிவன் அகத்தியன், தெய்வப்புலவன்
திருவள்ளுவன், சேரமான் சேரலாதன், சோழன் நலங்கிள்ளி, பாண்டியன்
மாறன், குருடன் கொற்றன் என வரும். 

தச்சக்கொற்றன்: தொழிலினானாகிய பெயர். 

‘திருவீரவாசிரியன்‘  என்றாற்போல இயற்பெயர் முற்கூறுவன பிறவும்
இக்காலத்தார்  மயங்கக்  கூறுவன  பிறவுங்  ‘கடிசொல்  இல்லை’ (452)
என்பதனாற் கொள்க. (41) 

ஒருபொருட் பல பெயர் மரபுவழுக் காத்தல்

42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே.
 

இஃது ஒரு பொருளை உணர்த்தும் பல பெயர் வழுக்காக்கின்றது. 

(இ-ள்.) ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க்கிளவி-ஒரு பொருளை
உணர்த்துதலைக்  குறித்து வந்த பல பெயர்ச் சொற்கள், தொழில் வேறு
கிளப்பின் - ஒரு  தொழிலையே   முடிபாகக்   கூறாது  பெயர்தோறும்
வேறாகிய  தொழில்களைக் கொடுத்து முடிப்பின், ஒன்றிடன் இல - ஒரு
பொருளினவாய் ஒன்றுதல் இல எ-று. 

கிளவி, கருவிக்கருத்தாவாய் நின்றது. 

‘ஆசிரியன்  பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்து
உண்டு  சென்றான்,’  என்னாது,  ‘ஆசிரியன்  வந்தான்;  பேரூர்கிழான்
உண்டான்; செயிற்றியன்