சென்றான்,’ என வேறுவேறு முடிக்குஞ் சொல் கொடுப்பின் ஒருவன்
ஆகாது வேறுவேறு பொருளாம்.
‘எந்தை
வருக! எம்பெருமான் வருக!’ என்றாற்போல்வன, காதல்
பற்றிப் பலகால் ஒரு தொழிலே வந்தனவாம். (42)
எண்ணின்கண் திணை வழுவமைதி
43.
தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென்று
எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்.
இஃது எண்ணின்கண் திணைவழு அமைக்கின்றது.
(இ-ள்.) தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி
என்று - தன்மைச்
சொல்லும் அஃறிணைச்சொல்லும் என்று கூறிய இரண்டும், எண்ணுவழி
மருங்கின் விரவுதல் வரையார்-எண்ணும் இடமாகிய இடத்து விராய்வந்து
தன்மைப்பன்மைச் சொல்லான் அஃறிணைச்சொல்
முடிதலை நீக்கார்
ஆசிரியர் எ-று.
மேல், ‘பன்மை
உரைக்குந் தன்மைக் கிளவி‘ (211) என்பதனானும்
பன்மைத்தன்மை பெற்றாம்.
‘யானுமென் எஃகமுஞ் சாறும் அவனுடைய
யானைக்குஞ் சேனைக்கும் நேர்.’
இஃது,
இருதிணையும் விராய்
எண்ணி, அஃறிணை
உயர்திணையொடு முடிந்தது. (43)
ஒருமை எண் நிற்குமாறு
44.
ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது.
இஃது
எண்ணுவகையாற் கூறும் ஒருவகைச்
சொல் நிகழ்ச்சி
கூறுகின்றது.
(இ-ள்.) ஒருமை
எண்ணின் பொதுப் பிரி பாற்சொல் - ஒருமை
எண்ணினை உணர்த்தும் ஒருவர் என்னும் பொதுமையினின்றும் பிரிந்த
பால் உணர்த்துஞ் சொல்லாகிய ஒருவன்
ஒருத்தி என்னுஞ் சொல்,
ஒருமைக்கு அல்லது எண்ணுமுறை நில்லாது - ஒருமைக்கண் அல்லது
இருமை முதலிய எண்ணுமுறைமைக்கண் நில்லாது, எ-று.
எனவே, பொதுப்
பிரியாப் பாற்சொல்லாகிய ‘ஒருவர்’ என்னுஞ் சொல்
‘இருவர், மூவர்’ என எண்ணுமுறைமைக்கண் நிற்பதாயிற்று. ‘இருவன்,
|