தலின்,
அடிசில் உண்டார், கை தொட்டார்
எனவும்; அணி
அணிந்தார், மெய்ப்படுத்தார் எனவும்;
இயம் இயம்பினார், படுத்தார்
எனவும்; படை வழங்கினார், தொட்டார்
எனவும் பொதுவினையாற்
கூறுக. இவற்றை ஒரு வினையாற் கூறின், வழுவாம்.
‘மூங்கில்
மிசைந்த முழந்தாள் இரும்பிடி’ (கலி. 50 : 2) எனவும்,
‘நளிபுகை கமழாது இறாயினிர் மிசைந்து’
(மலைபடு. 249) எனவும்,
‘இடம்படின், வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த’ (அக. 29: 2- 3)
எனவும் ‘கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய,
அறுவர் மற்றையோரும்
அந்நிலை அயின்றனர்’ (பரி. 5: 44, 45) எனவும், இவை தின்றெனவும்
விழுங்கி எனவும் பெரும்பான்மை வருதலின், ‘மிசைந்தார், அயின்றார்’
என்பன உதாரணங்காட்டல் பொருந்தாமை உணர்க.
இனி,
‘உண்டற் குரிய அல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே.’
(19)
என்னும் பொருளியற் சூத்திரத்தான் உண்டற் றொழில் எல்லாவற்றிற்கும்
பெரும்பான்மை வருதல் பெற்றாம்.
‘அறுசுவை அடிசில் அணியிழை தருதலின்
உறுவயி றார ஓம்பாது தின்றென’
என்பது இழித்தற்கண் வருதலின், வழுவன்று, (46)
47. எண்ணுங் காலும் அதுவதன் மரபே.
இதுவும் அது
(இ-ள்.) எண்ணுங்காலும்
- அவ்வேறுவினைப் பொருள்களைப்
பொதுச் சொல்லாற் கூறாது பிரித்து
எண்ணுமிடத்தும், அது அதன்
மரபே - அதன் இலக்கணம்
ஒரு வினையாற் கிளவாது
பொதுவினையான் கிளத்தலேயாம், எ-று.
‘சோறுங் கறியும் நன்றென்று உண்டார்.’
‘யாழுங் குழலும் பறையும் இயம்பினார்.’
என வரும். ‘தின்றார், ஊதினார்’ என்றால் வழுவாம்.
‘ஊன்துவை
கறிசோறுண்டு வருந்துதொழி லல்லது’ (புறம். 14: 13, 14)
என்புழி நுகரப்படும்
பொருள் எல்லாவற்றிற்கும் உண்டற்றொழில்
வந்தவாறு காண்க. (47)
இரட்டைக் கிளவி அமையுமாறு
48. இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா.
இஃது, உரிச்சொற்கண் மரபுவழுக் காக்கின்றது.
(இ-ள்.) இரட்
|