நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   517
Zoom In NormalZoom Out


்டைக்  கிளவி - இரட்டித்து நின்று பொருள் உணர்த்துஞ் சொற்கள்,
இரட்டிற்பிரிந்து இசையா-இரட்டித்து நிற்றலிற் பிரிந்து நில்லா, எ-று. 

சுருசுருத்தது,   மொடுமொடுத்தது   என  இசை  பற்றியும்,  கொறு
கொறுத்தார், மொறுமொறுத்தார் எனக் குறிப்புப் பற்றியும், குறுகுறுத்தது,
கறுகறுத்தது எனப் பண்பு பற்றியும் இரட்டித்துப் பிரியாது நின்றன. 

இவை   ‘குறுத்தது குறுத்தது’  என ஒருசொல் முழுவதும் இருமுறை
வாராமையின்,  அடுக்கு  அன்று.  இவை மக்கள் இரட்டையும் விலங்கு
இரட்டையும்போல   வேற்றுமை   இன்றி,   இலை   இரட்டையும்  பூ
இரட்டையும்  போல  ஒற்றுமையும்  வேற்றுமையும் உடையவாம். ‘குறு’
என்னுஞ் சொல்  அடுத்துக் ‘குறுத்தது’ என்பது மிகுதி உணர்த்திற்றேல்,
‘குறு’   என்பது  யாண்டும்   மிகுதி  உணர்த்தல்  வேண்டும். அஃது
உணர்த்தாமையின், இரண்டும் ஒருசொல்லே யாயின. (48) 

ஒருபெயர்ப் பொதுச்சொல் மரபு

49. ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத்
தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்.
 

இஃது, ஒரு பெயர்ப் பொதுச்சொல் மரபுவழுக் காக்கின்றது. 

(இ-ள்.) உயர்திணை  மருங்கினும்  அஃறிணை மருங்கினும் - உயர்
திணைக்கண்ணும்       அஃறிணைக்கண்ணும்,      ஒரு     பெயர்ப்
பொதுச்சொல்-ஒரு பெயராய்ப் பல பொருட்குப் பொதுவாகிய சொல்லை,
உள்பொருள்   ஒழியத்  தெரிபு  வேறு கிளத்தல் - பிற உள் பொருள்
ஒழியத்   தெரிந்து   கொண்டு   பொதுமையின்  வேறாகச்  சொல்லுக,
தலைமையும் பன்மையும்-தலைமையானும் பன்மையானும், எ-று. 

பிறரும்  வாழ்வார்  உளரேனும்,  ‘பார்ப்பனச்சேரி’  என்றல்  உயர்
திணைக்கண் தலைமைபற்றிய வழக்கு. ‘எயினர் நாடு’ என்ப