நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   518
Zoom In NormalZoom Out


து   அத்திணைக்  கண்  பன்மைபற்றிய  வழக்கு. பிற புல்லும் மரமும்
உளவேனும்,     ‘கமுகந்    தோட்டம்’   என்றல்   அஃறிணைக்கண்
தலைமைபற்றிய   வழக்கு.  பார்ப்பார் பலராயினும், கமுகு பலவாயினும்
அவை தாமே பன்மைபற்றிய வழக்காம். ‘ஒன்றென முடித்த’லான், அரசர்
பெருந்தெரு.   ஆதீண்டு  குற்றி, வயிரக் கடகம் என்னும் பொதுச்சொல்
அல்லனவுங்கொள்க.  பல குடி சேர்ந்தது சேரி. பல பொருள் தொக்கது
தோட்டம். (49) 

ஒன்றொழி பொதுச்சொல்

50. பெயரினுந் தொழிலினும் பிரிபவை எல்லாம்
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன.
 

இஃது, இருதிணை இருபாற்கும் பொதுவாகிய பெயர்க்கண் மரபுவழுக்
காக்கின்றது. 

(இ-ள்.) பெயரினுந் தொழிலினும் பிரிபவை எல்லாம் - உயர்திணைக்
கண்ணும்  அஃறிணைக்கண்ணும்  பெயரினானுந் தொழிலினானும் பொது
மையிற்  பிரிந்து  ஆண்பாற்கும்  பெண்பாற்கும்  உரியவாய்  வருவன
எல்லாம்,   மயங்கல்கூடா   -   வழுவாகா,  வழக்கு   வழிப்பட்டன -
வழக்கின்கண் அடிப்பட்டன ஆதலான், எ-று. 

(எ-டு.) ‘பெருந்தேவி   பொறை  உயிர்த்த  கட்டிற்கீழ் நால்வர் மக்கள்
உளர்.’-  இது,   பெயரிற்   பிரிந்த  ஆண் ஒழி மிகுசொல். ‘வடுகரசர்
ஆயிரவர்  மக்களை  உடையர்.’- இது,  தொழிலிற் பிரிந்த பெண் ஒழி
மிகுசொல். ‘இவர்  வாழ்க்கைப்பட்டார்’- இது தொழிலிற்  பிரிந்த ஆண்
ஒழி  மிகுசொல்.  ‘இவர்  கட்டில்  ஏறினார்.’-  இது, தொழிலிற் பிரிந்த
பெண்   ஒழி   மிகுசொல்.  இவை   உயர்திணைக்கண்   பெயரானும்
தொழிலானும்  பிரிந்தன. ‘நம்பி நூறு எருமை உடையன்.’-இது, பெயரிற்
பிரிந்த   ஆண்  ஒழி   மிகுசொல்,   ‘நம்  அரசன்  ஆயிரம் யானை
உடையன்’.-  இது,   பெயரிற்  பிரிந்த பெண் ஒழி மிகுசொல். ‘யானை
ஓடிற்று,’