இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்
காற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி எனப்படு வார்.’
(ஆசாரக்.64)
‘பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டு’
(சிலப். 21:53, 54)
இவை திணைவிராய் எண்ணி உயர்திணையான் முடிந்தன.
உயர்திணையும்,
‘பொருள்’ என்னும்
பொதுமையான்
அஃறிணைக்கண் அடங்குதலானும், உயர்திணைக்கண்
அஃறிணை
அவ்வாறு அடங்காமையானும் ஆசிரியர் ‘அஃறிணை முடிபின,’
என்றார்.
திணைவிராய்
எண்ணி அஃறிணையானும் உயர்திணையானும்
முடிந்தது, தலைமைபற்றியும் பன்மைபற்றியும்
இழிவுபற்றியும் என
உணர்க.
‘தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்.’
(யா.வி.சூ.28 உரை)
என்றாற்போல்வன,
தலைமைப் பொருட்குவினை கொடுப்பவே
தலைமையில் பொருளும் உடன்முடிந்ததொரு
முறைமைபற்றி
வந்தனவாம். (51)
பலபொருள் ஒருசொல்லின் வகை
52.
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென்று
ஆயிரு வகைய பலபொருள் ஒருசொல்.
இதனால்,
பல சொல்லான்வரும் ஒருபொருள் உணர்த்தி, இனி ஒரு
சொல்லான் வரும் பலபொருள் உணர்த்துகின்றார், அவற்றின் பெயரும்
முறையும் தொகையும் கூறுகின்றார்.
(இ-ள்.) வினை
வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்-வினையான்
வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும், வினை வேறுபடாஅப் பல
பொருள் ஒரு சொல் - வினையான் வேறுபடாத பல பொருள் ஒரு
சொல்லும், என்று ஆயிரு வகைய பல பொருள் ஒரு சொல் - என
அவ்விரண்டு வகைப்படும்
|