நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   524
Zoom In NormalZoom Out


காதாயின்,  தெரித்து மொழி கிளவி - அப்பொருளைத் தெரிவித்துச்
சொல்லுஞ் சொல்லாகக் கூறுக, எ-று. 

‘அரிதாரச் சாந்தம் கலந்தது போல
உருகெழத் தோன்றி வருமே - முருகுறழும்
அன்பன் மலைப்பெய்த நீர்.’
 

எனத்  தெரித்துமொழிக.  ‘கலந்ததுபோல வருமே இலங்கருவி அன்பன்
மலைப்பெய்த நீர்,’ எனத் தெரித்து மொழியாக்கால் வழுவாம். 

‘ஊட்டி யன்ன ஒண்டளிர்ச் செயலை’           (அக.68) 

என்றது,  ஊட்டாததனை  ஊட்டியதுபோலக்  கூறலின், வேறோர் உவம
இலக்கணமாம். 

‘பல்லார்தோள் தோய்ந்து வருதலாற் * பாய்புனல்
நல்வய லூர! நின் தார்புலால் - புல்லெருக்கம்
மாசில் மணிப்பூ ணெம் மைந்தன் மலைந்தமையான்
காதற்றாய் நாறும் எமக்கு.’
 

இதுவும் தெரித்து மொழிந்தது. 

‘புல்லேங் குவளைப் புலாஅல் மகன்மார்பிற்
புல்லெருக்கங் கண்ணி நறிது.’
 

என்பது   தெரித்து  மொழியாததாயிற்றாயினும்,   தலைவன்   தவறும்
புதல்வன்  மேல்  அன்புங்  காரணமாகக் கூறலின் வழுவன் றென்றலும்
ஒன்று. (56) 

*(பாடம்) பூம்பொய்கை. 

சில உயர்திணைப்பெயர் அஃறிணை முடிவு கோடல்

57. குடிமை ஆண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை அரசே மகவே குழவி
தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
முன்னத்தி னுணருங் கிளவி யெல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையின வாயினும்