நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   525
Zoom In NormalZoom Out


அஃறிணை மருங்கின் கிளந்தாங் கியலும். 

இது, திணை வழுக் காக்கின்றது. 

(இ-ள்.)  குடிமை  ஆண்மை  இளமை  மூப்பே  அடிமை வன்மை
விருந்தே  குழுவே பெண்மை அரசே மகவே குழவி தன்மை திரிபெயர்
உறுப்பின்  கிளவி  காதல்  சிறப்பே  செறற்சொல்  விறற்சொல் என்று
ஆவறு  மூன்றும்  உளப்பட  அன்ன  பிறவும்  அவற்றொடு  சிவணித்
தொகைஇ -  குடிமை  முதலாக  விறற்சொல்  ஈறாகச்  சொல்லப்பட்ட
அப்பதினெட்டும்  உளப்பட  அவை  போல்வன  பிறவும் அவற்றொடு
பொருந்தித்   தொக்கு,   முன்னத்தின்   உணரும்  கிளவி எல்லாம் -
சொல்லுவான்    குறிப்பொடு    படுத்து   உயர்திணைப்   பொருளை
உணரப்படும்  சொற்கள்  எல்லாம்,  உயர்திணை  மருங்கின் நிலையின
ஆயினும்   -   உயர்திணை   இருபாற்கண்ணும்   பெரும்  பான்மை
நிலைபெற்றன  ஆயினும், அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும் -
அஃறிணைப்  பொருளை  உணர்த்தி  நின்றவழிப்  போல  அஃறிணை
முடிபே கொள்ளும், எ-று. 

‘என்னை  உயர்திணைப்பொருள்  உணர்த்தியவாறு?’  எனின்,  இக்
குடிமை  முதலியன  வெல்லாம்  பெரும்பான்மையும்  உயர்திணைக்குப்
பண்பேயாய்   நின்று   அப்பண்பினை   உணர்த்தி,   அஃறிணையாய்
நில்லாது,   அப்பண்புச்சொல்   தன்   பண்பையும்   தன்னை யுடைய
பொருளையும்    ஒருங்கு    தோற்றுவித்துப்    பிரியாது   நிற்றலின்,
உயர்திணைப்  பொருளையே உணர்த்தினவாம். இங்ஙனம் நிற்குமென்று
உணர்தல் சொல்லுவான்