குறிப்பனானன்றி
உயர்திணைப் பொருளின் தீர்ந்து இன்னவாறு
நிற்குமென்று வேறோர் ஆற்றான் உணர்தலின்று என்றற்கு ‘முன்னத்தின்
உணரும்’ என்றார். இவற்றுள் விரவுப்பெயராய்
அஃறிணைப்பண்பை
உணர்த்துவன உளவேனும், அவையுஞ்
சொல்லுவான் குறிப்பான்
ஒருகால் உயர்திணைப் பண்பே உணர்த்துமென்று கருதி, ‘உயர்திணை
மருங்கின் நிலையின ஆயினும்’
என்றார். உயர்திணைப்பெயரும்
விரவுப்பெயரும் மேற் கூறுபடுத்துதும்.
இனி,
‘குடிமை, ஆண்மை’ முதலியவற்றை ஆகுபெயர் என்பாரும்
உளர். ‘குடிமை’ என்னுங் குணப்பெயர்
ஆகுபெயராய்க் குடிமகனை
உணர்த்திற்றேல், ‘குடிமை நல்லன்,’
என உயர்திணையான் முடியும்;
அன்றிக் ‘குடிமை’ எனத் தனக்குரிய பண்பை உணர்த்தி நிற்குமேல்,
பின்னர் ‘அஃறிணை மருங்கின் கிளந்தாங்கியலும்’
எனல் வேண்டா,
தானே அஃறிணையான் முடியும். ஆதலின், ‘ஆகுபெயர்’ என்றலும்
‘பண்பு உணர்த்தி நிற்கும்’
என்றலும் பொருந்தாமை உணர்க.
இக்குடிமை முதலிய வற்றிற்கு ‘நன்று, தீது’ என்றும், ‘வந்தது, போயிற்று’
என்றும் ஏற்ற அஃறிணை வினைகொடுத்து ஒட்டுக.
இனி
இவை உயர்திணைப் பண்பாய் அப்பொருளையும் ஒருங்கு
உணர்த்தி நிற்குமாறு:-
குடிமையாவது,
குடிப்பிறப்பிற்கேற்ற ஒழுக்கம். அஃது. ‘ஒழுக்கம்
உடைமை குடிமை’ (குறள்.133) என்றதனான் உணர்க. ‘மடிமை
|