குடிமைக் கண்
தங்கின்’ (குறள்.608) என உயர்திணை இருபாலையும்
உணர்த்திற்று.
ஆண்மையாவது, ஆளுந்தன்மை. அஃது,
‘ஆயிடை
இருபே ராண்மை செய்த பூசல்
(குறுந்.43) என
இருபாலையும் உணர்த்திற்று. இன்னும், ‘ஊராண்மைக் கொத்த
படிறுடைத்து’ (கலி.89 : 2) எனவும், ‘வேளாண்மை செய்து விருந்தோம்பி
வெஞ்சமத்து, வாளாண்மையானும் வலியராய்த்
- தாளாண்மை’ (பழ.151)
எனவும் வரும். இது, ‘வேளாண் எதிரும் விருந்தின் கண்ணும், வாளாண்
எதிரும் பிரிவினானும்’ (களவியல் 16) எனவும், ‘உட்குடையாள் ஊராண்
இயல்பினாள்’ (நாலடி 384) எனவும்
விகாரமாயும் நிற்கும். இவ்
வாண்மை. ஆளுந்தன்மையே அன்றி
ஆண்பாலாகிய தன்மையும்
உணர்த்தும் என்றற்கு, ‘ஆண்மை
சுட்டிய எல்லாப் பெயரும்’
(பெயரியல் 27) என்று ஆசிரியர்
விரவுப்பெயர்க்கண் உடம்பொடு
புணர்த்து ஓதினார். இவ்விரண்டு பண்பும்.
‘பிறப்பே குடிமை ஆண்மைஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.’
என்னும் மெய்ப்பாட்டியல்
சூத்திரத்தான் தலைவற்கும் தலைவிக்கும்
ஒப்பவுரிய என்றே ஓதுகின்றா ராதலின் ஈண்டும் இருபாற்கும் ஒப்பவே
ஓதினார்.
இனி, ஆண்மையை ‘ஆள்வினை’
|