நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   528
Zoom In NormalZoom Out


என்றும்   உரைப்ப.   இவ்வாண்மையும்  மேற்கூறும்    பெண்மையும்
உயர்திணை  ஆண்பாலையும் பெண்பாலையும் உணர்த்தா என்று கருதி,
‘ஆண்பால்   எல்லாம்   ஆணெனற்   குரிய,   பெண்பால்  எல்லாம்
பெண்ணெனற்குரிய’    (மரபியல் 50)   என   அஃறிணைக்கே   ஓதி,
அவற்றையே,  ‘பெண்ணும்  ஆணும்  பிள்ளையும் அவையே’ (மரபியல்
69) எனக்  கிளந்து  கூறாதவழி ஆண் பெண் என்பன உயர்திணையை
உணர்த்தும் என்று மரபியலுள் கூறுவர். 

அன்றியும், ‘புல்லா   வாழ்க்கை   வல்லாண்   பக்கமும்’  (புறம்.21)
என்றும், ‘பாடாண்  பகுதி’  (புறம். 25) என்றும் பிறாண்டும் ‘ஆண்மை’
என்னாது, ‘ஆண்’  என்றே  சூத்திரஞ் செய்ததனானும், ‘ஆண் மக்கள்,
பெண்மக்கள்’   என்னும்   வழக்கானும்   உணர்க. இனி, ஆண்மையை
விரவுப்பெயர்      என்றால்,      முற்காட்டிய     உதாரணங்கட்கும்
அஃறிணைப்பெயர்க்கும் விரவுப்பொருள் ஏலாமை யுணர்க. 

‘ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த’

(புறம். 242:4)

என்பதற்கும்  ‘ஆளுந்தன்மை  தோன்ற’  என்றே பொருள் உரைத்துக்
கொள்க. 

இளமையாவது, காமச்செவ்வி நிகழ்வதொரு காலம். 

‘இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே.’

(நற்.126: 9,10)

என உயர்திணை இருபாலும் உணர்த்திற்று. 

மூப்பு,   ‘மூப்புடை   முதுபதி’   (அகம். 7)   என   உயர்திணை
இருபாலையும் உணர்த்திற்று. 

இளமையும்  மூப்பும் பொருள்மேல் நில்லாது பண்பின்மேல் நிற்பின்,
அஃறிணையையும் உணர்த்