நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   530
Zoom In NormalZoom Out


பாற்கே வரினும் அதுவும் உயர்திணையே ஆதல் நோக்கி, ‘உயர்திணை
மருங்கின் நிலையின ஆயினும்’ (57) என்றார். 

அரசு  ஆவது  ‘அரசுபடக் கடந்தட்டு’ (கலி.105:1) என உயர்திணை
ஆண்பால்  உணர்த்திற்று.  ‘பெண்  அரசி ஏந்தினள்’ (சீவக. 736) என
ஈறு  வேறாயவழிப்  பெண்பாலும் உணர்த்தும். இஃது ‘அரசுவா வீழ்ந்த
களத்து’ (களவழி.35) என அஃறிணைக்கும் வரும். 

இனி,  மகவும்  குழவியும்  ஆவன  - ‘குழவியும் மகவும் ஆயிரண்
டல்லவை,   கிழவ   அல்ல   மக்கட்கண்ணே’   (மரபியல் 23)  என
அஃறிணைக்கேயன்றி உயர்திணை இருபாற்கும் வரும் என்றார். 

தன்மை திரி பெயர், அலி. 

உறுப்பின் கிளவி ஆவன-குருடு, முடம். இவை இருபாற்கும் ஒக்கும்.
விரவுப்பெயர்க்காயின், ‘முடவன், முடத்தி என வரும். 

காதல்  ஆவது - ‘யானை வந்தது, பாவை வந்தது,’ என ஒப்பின்றிக்
காதல்  பற்றி  நிற்கும்.  அது, ‘போர்யானை வந்தீக ஈங்கு.’ (கலி. 86:10)
என  வரும்.  ‘தன்னினம்  முடித்தலான்,  ‘தேமலர்  அங்கண் திருவே
புகுதக.’ (சீவக. 2121) என உவப்புங் கொள்க. 

சிறப்பு   ஆவது  -  கண்போலச்  சிறந்தாரைக் ‘கண்’   என்றலும்,
உயிர்போலச்   சிறந்தாரை   ‘உயிர்’   என்றலுமாம்  அஃது, ‘ஆலமர்
செல்வன்  அணிசால்  பெரு  விறல்,  போல  வருமெம்  உயிர்.’ (கலி.
81:9-10) என வரும். 

செறற்சொல்  ஆவன - செறுதலைப்  புலப்படுக்கும்  சொல். அவை
பொறியறை, கெழீஇயிலி, போ சீத்தை2 என்றாற் போல்வன. (கலி.94:22) 

‘தன்னினம்   முடித்த’லான்,   ‘ஏவவும்  செய்கலான்  தான்தேறான்
அவ்வுயிர், போஒம் அளவுமோர் நோய்