நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   533
Zoom In NormalZoom Out


வியாழம் நன்று என வரும். 

உலகம்  வடசொல்  அன்று.  ‘உலகம்’ என்பது, மக்கள் தொகுதியை
உணர்த்தியவழி    உயர்திணையாயும்,    இடத்தை    உணர்த்தியவழி
அஃறிணையாயும் வருதலின், ஒருசொல் இருபொருட்கண்ணுஞ் சென்றது
எனப்படாது,  இருசொல்  எனவேபடும். அங்ஙனம் மக்கள் தொகுதியை
உணர்த்துங்கால்  உரிய  பெயராயே உணர்த்திற்று; ஆகுபெயர் அன்று.
இங்ஙனம் வருவனவற்றைப் பலகால் எடுத்து ஓதாமை இலேசாகக் கருதி,
‘ஒருசொற் பலபொருட்குரிமை தோன்றினும்’ என எழுத்து ஒப்புமைபற்றி
‘ஒரு சொல்’ என்றார். ‘உலோகம்’ என்றது வடமொழித் திரிபு. (58)
 

குடிமை’ என்னும் சூத்திரத்திற்குப் புறனடை 

59. நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே. 

இது, ‘குடிமை ஆண்மை’த் (57) தொடக்கத்திற்கு ஒரு புறனடை 

(இ-ள்.) நின்றாங்கு   இசைத்தல்-ஈறு  திரியாது  நின்றாங்கு நின்று
உயர் திணையாய் இசைத்தல், இவண்  இயல்பு  இன்று- காலம் முதலிய
சொற் களிடத்து இயல்பு இல்லை, எ-று. 

எனவே,  ‘குடிமை,  ஆண்மை’ முதலிய  சொற்களிடத்து   இயல்பு
உண்டாம் என்றவாறு. 

குடிமை நல்லன்; ஆண்மை நல்லன்; மூப்புத் தீயன்-என ஒட்டுக,

(59)

‘காலம் உலகம்’ என்னும் சூத்திரத்திற்குப் புறனடை 

60. இசைத்தலும் உரிய வேறிடத் தான. 

இது, ‘காலம் உலகத்திற்கு’ (58) ஒரு புறனடை 

(இ-ள்.) இசைத்தலும்  உரிய-காலம்  உலகம் முதலிய  சொற்களுள்
உயர்திணையாய் இசைத்தலும்