நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   534
Zoom In NormalZoom Out


உரிய,  வேறு இடத்தான - ஈறு திரிதற்கு ஏற்பன ஈறு திரிந்து வாய்பாடு
வேறுபட்ட இடத்து, எ-று.
 

காலன்  கொண்டான்,  உலகர் பசித்தார்; என ஈறு திரிவனவற்றோடு ஒட்டுக. (60) 

அருத்தாபத்தி

61. எடுத்த மொழியினஞ் செப்பலும் உரித்தே. 

இஃது அருத்தாபத்தி கூறுகின்றது. 

(இ-ள்.) எடுத்த மொழி - இனமாகிய  பொருட்கண் ஒன்றை விதந்து
வாங்கிக்  கூறிய அச்சொல், இனம் செப்பலும் உரித்து - தன் பொருட்கு
இனமாகிய பிற பொருளைக் குறிப்பான் உணர்த்துதலும் உரித்து எ-று.
 

உம்மை  எதிர்மறை  ஆகலின்,  உணர்த்தாமையும்  உரித்தாயிற்று.
‘அறம் செய்தான் துறக்கம் புகும்’ என்றவழி  இனப்பொருளாகிய  ‘மறம்
செய் தானம் நிரயம் புகும்’ என்பது உணர்த்திற்று.
 

‘இழிவறிந்து உண்பான்கண் இன்பம் எய்தும்’ (குறள்.946) என்றவழிக்
கழிபேரிரையான்  இன்பம்  எய்தான்’  (குறள். 946)  என்பதும்  இனப்
பொருளை உணர்த்திற்று.
 

‘கீழ்ச்சேரிக்  கோழி  அலைத்தது’ என, ‘மேற்சேரிக் கோழி அலைப்
புண்டதும்  அது. ‘ஆ  வாழ்க!  அந்தணர்  வாழ்க!’  என்பன,  இனஞ்
செப்பாதன.  அருத்தாபத்தி  இனஞ் செப்புமாறு, தன்னொடு மறுதலைப்
பட்டு நிற்பது ஒன்று  உள்வழி ஆயிற்று. மறுதலைப்பாடு பல உள்வழிச்
செப்பாது. ஆவிற்கு மறுதலை, எருமை, ஒட்டகம் எனப் பல