உள; அந்தணர்க்கு மறுதலை, அரசர், வணிகர், வேளாளர் எனப்
பிறரும் உளர். அங்ஙனம் பல மறுதலை உள்வழிச் செப்பாது. (61)
திணைவழுக் காத்தல்
62.
கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறுங் கடப்பா டிலவே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே.
இதுவும் திணைவழுக் காக்கின்றது.
(இ-ள்.) கண்ணும் தோளும் முலையும் பிறவும்-கண்ணுந் தோளும்
முலையும் அவை போல்வன பிறவும், பன்மை சுட்டிய சினைநிலைக்
கிளவி - பன்மையைக் குறித்து நின்ற சினை நிலைமையை
உணர்த்திய
சொற்கள், தம் வினைக்கு இயலும் எழுத்தலங்கடை - அவை தமக்குரிய
பன்மை வினைக்கு ஏற்ற அகரஈற்றான் கூறக் கருதாது தம்
முதல்வினைக்கு ஏற்ற ஒருமை ஈற்றானும் பன்மை ஈற்றானும் கூறக்
கருதியவழி, பன்மை கூறும் கடப்பாடு இல - தமக்குரிய பன்மையாற்
கூறப்படும் யாப்புறவு உடையவல்ல, எ-று.
(எ-டு.) கண் நல்லள், முலை நல்லள் எனவும்; கண் நல்லர், தோள்
நல்லர், முலை நல்லர், எனவும்; கண் நொந்தாள், தோள் நொந்தாள்,
முலை நொந்தாள் எனவும் வரும். ‘பிறவும்’ என்றதனாற் ‘புருவம், காது
முதலியனவும் கொள்க.
மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என ஒருமைச் சினைப்பெயர்
நின்று உயர்திணை கொண்டனவும், நிறம் கரியள், கவவுக் கடியள் எனப்
பண்புந் தொழிலும் நின்று உயர்திணை கொண்
|