நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   538
Zoom In NormalZoom Out


யே கூறி, இவற்றுள் எஞ்சி நின்ற இலக்கணத்தை எச்சவியலிற் கூறினார்
என்று உணர்க.
 

‘பொருண்மை  சுட்டல்’  முதலிய  ஆறு  பொருளையுங்   குறித்து
அவற்றான்  தான்  வேறுபட நிற்றலானும், முடிக்குஞ் சொல்லைத் தான்
விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று.
 

இச்சூத்திரம் வேற்றுமை இனைத்து என்கின்றது. 

(இ-ள்.) வேற்றுமை  தாமே  ஏழென  மொழிப - வேற்றுமையாவன
ஏழென்று சொல்லுவர் தொல்லாசிரியர், எ-று.
 

‘தாமே’ என்பது சந்த இன்பம் செய்து நின்றது. (1) 

இதுவும் அது 

64. விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. 

இஃது, ஒழிந்த வேற்றுமையும் கூறித் தொகை கூறுகின்றது. 

(இ-ள்.) விளி  கொள்வதன்கண்  விளயோடு-விளி  ஏற்கும் பெயர்க்
கண்ணதாகிய    விளியொடு    முற்கூறியவற்றைத்     தலைப்பெய்ய,
எட்டே-வேற்றுமை எட்டாம், எ-று.
 

‘விளி  கொள்வதன்கண்  விளி’  என்றதனான்,  பிறிதோர்  இடைச்
சொல்லை  ஏலாது  தானே திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயர் இறுதி
விளி என்பது பெற்றாம். (2)
 

வேற்றுமைகளின் பெயரும் முறையும்

65. அவைதாம்
பெயர்ஐ ஒடுகு
இன்அது கண்விளி யென்னும் ஈற்ற. 

இஃது அவற்றின் பெயரும் முறையும் உணர்த்துகின்றது. 

(இ-ள்.) அவைதாம்  -  எட்டு  எனப்பட்ட வேற்றுமையாவன, விளி
என்னும்  ஈற்ற-விளி  வேற்றுமையை இறுதியாக உடைய, பெயர் ஐ ஒடு
கு இன் அது கண்-பெயரும் ஐயும்  ஒடுவும்  குவ்வும் இன்னும் அதுவும்
கண்ணுமாம், எ-று.
 

‘சிறப்புடைப்  பொருளைத்  தானினிது  கிளத்தல்’ என்பதனான் ஒடுவும்
அதுவும் ஓதினாரேனும், மூன்றாவதற்குச் சிறுபான்மை ஓடுவும்