நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   540
Zoom In NormalZoom Out


லை யுரைத்தல் வினாவிற் கேற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று
அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. 

இஃது அவ்வெழுவாய் ஆறு பயனிலையும் ஏற்கும் என்கின்றது. 

(இ-ள்.) பொருண்மை சுட்டல் - ஒரு பொருளினது பண்பு முதலியன
சுட்டாது  அப்பொருட்டன்மையது  உண்மைத்தன்மையே  சுட்டி  நிற்க
வருதல், வியங்கொள வருதல்- தான் ஏவலைக் கொள்ள வருதல், வினை
நிலை உரைத்தல் - தனது  தொழிலினைச் சொல்ல வருதல், வினாவிற்கு
ஏற்றல்-தான் வினாவிற்குப் பொருந்தி  வருதல், பண்பு  கொள வருதல்
-தனது  பண்பினைத்  தான்  கொள்ள வருதல்,  பெயர் கொள வருதல்
-தான் பெயரைக் கொண்டு  முடிய வருதல், என்று அன்றி அனைத்தும்
-என்று சொல்லப் பட்ட  அவ்வனைத்து வரவும், பெயர்ப்பயனிலையே -
அவ்வெழுவாய் வேற்றுமையது பயனாகிய நிலைமை, எ-று.
 

தன்னை  முடித்தற்குப்  பின்  வருஞ் சொல்லின் பொருண்மையைத்
தான் அவாவிநிற்கும் நிலை வேறுபாட்டைப் பயனிலை என்றார்.
 

(எ-டு.) ஆ  உண்டு,  ஆ  செல்க,  ஆ  கிடந்தது, ஆ யாது? ஆ
எவன்? ஆ கரிது, ஆ பல என வரும்.
 

‘தன்னினம்  முடித்தல்’  என்பதனான், ஆ இல்லை, ஆ அல்ல என
வினைக்குறிப்பும் கொள்க.
 

‘பொருள்’ என்னாது ‘பொருண்மை’ என்றார், அப்பொருளினது தன்