மை உணர்த்துதற்கு. பொருள் தன்மையாவது, அப்பொருள்களின்
சாதித்தன்மை. ‘ஆ’ என்னும் பொருள் கெட்டதேனும், அவ்வாவினது
சாதித்தன்மை எக்காலத்தும் கெடாது நிற்கும் என்பது உணர்த்துதற்கு
‘ஆ உண்டு’ என்றார். ‘கட்புலனாகிய ஆ கெடவும், அச்சாதித்தன்மை
கெடாது’ என்பது தோன்றப் ‘பொருண்மை சுட்டல்’ என்று சூத்திரஞ்
செய்தார்.
வினை நிலை உரைத்தல், தன் தொழில்; வியங்கொள வருதல், மேல்
தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவன் ஏவப்படுதல். இரண்டற்கும்
இதுவே வேறுபாடு.
வினைநிலை உரைத்தலும், பண்புகொள வருதலும், பெயர்கொள
வருதலும், முடிக்குஞ் சொல் ஆதலேயன்றி, முடிக்கப்படுஞ்
சொல்லாயல்லது நில்லா. வினைக்குறிப்பும் முடிக்குஞ் சொல்லாயல்லது
வாராது.
‘ஆ பல’ என்பது பிறிது ஒரு சொல் நோக்காது, ஆ என்பதனோடு
அமைந்து மாறும்.
முன்னிற்சூத்திரத்துத் ‘தோன்று நிலை’ என்றதனானே ‘ஆயன் சாத்தன்
வந்தான்’ எனப் பண்பு ஒட்டு ஆகாது விட்டிசைத்து நின்று மற்றோர்
எழுவாயின் பயனிலையொடு தானும் பயனிலை கோடலும்,
‘ஆயன்
வந்தான் சாத்தன்’ என வினைப்பின்னும் நிற்றலும், ‘சாத்தன் தலைவன்
ஆயினான்’ எனப் பயனிலைக்கு அடையாய் நிற்றலும், ‘சாத்தன் கண்
நல்லன்’ எனச் சினைவினை முதற்கு ஏற்றிக்கூறலும், ‘இம்மணி
|