க்க தொகையும் உள (உம்மையால், பெயரும் வினையும் தொக்க
தொகையும் உள); அவ்வும் உரிய அப்பாலான - அவ்விரண்டனுள்
பெயருந் பெயருந் தொக்க தொகையும் உரிய அவ்வெழுவாய்
வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளுமிடத்து, எ-று.
‘அவ்வும் உரிய’ என்றது, இரண்டற்கும் பொதுவேனும்,
‘ஏற்புழிக்
கோட’லான் ஒன்றற்கே ஆயிற்று.
(எ-டு.) யானைக்கோடு கிடந்தது. மதிமுகம் வியர்த்தது, கொல்யானை
நின்றது, கருங்குதிரை ஓடிற்று, உவாஅப்பதினான்கு கழிந்தன,
பொற்றொடி வந்தாள் என வரும்.
நிலங் கடந்தான் குன்றத்து இருந்தான், எனப் பெயரொடு வினை
தொக்கன எழுவாயாய்ப் பயனிலை கொள்ளாது முற்றாய் நிற்கும் என்று
உணர்க. இதனான், தொகை இருவகைய என்பதூஉங் கூறினார் ஆயிற்று.
(6)
எழுவாய் புலப்படும் புலப்படாதும் நிற்றல்
69.
எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப.
இஃது, அவ்வெழுவாய் புலப்பட்டும் புலப்படாதும் நிற்கும்
என்கின்றது. (இ-ள்.) எவ்வயிற்பெயரும் வெளிப்படத் தோன்றி - மூன்றிடத்து
எழுவாயும் செவிப்புலனாகத் தோன்றி நின்று, அவ்வியல் நிலையல்
செவ்விது என்ப - பயனிலை கோடல் செவ்விது என்ப ஆசிரியர், எ-று.
எனவே, அவ்வாறு தோன்றாது நின்று பயனில கோடலும் உண்டு;
அது செவ்விது அன்று என்றவாறாம்.
‘அவ்வியல் நிலையல்’ என்பது எவ்வியல் நிலையலோ?’ எனின், மேற் கூறிய ஆறு பயனிலையுங் கொண்டு நிற்ற
|