காலந் தோன்றா
தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே.
இது பெயர்க்கு ஓர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) பெயர்க் கிளவி - பெயர்ப்பெயராகிய சொல்லும், நிலைக்
கிளவி - அப்பெயரது நிலையிலே நிற்றலை உடைய சொல்லும், காலம்
தோன்றா - காலந் தோன்றாவாய் நிற்கும்; தொழில் நிலை ஒட்டும்
ஒன்றலங் கடையே - ஒரு பொருளது புடைபெயர்ச்சியாய்க் காலந்
தோன்றுதற்குப் பொருந்தும் ஒரு கூற்றுத் தொழிற்பெயர் அல்லா
இடத்து, எ-று.
‘பெயர்,
தொழில் நிலை’ என்பன ஆகுபெயர். பெயர் - பொருள்;
தொழில் நிலை-காலம்; ஒட்டும்-பொருந்தும்.
இதனான், திணையும் பாலும்
காலமும் இடனுந் தோன்றும் தொழிற்
சொல் படுத்தல் ஓசைப்பட்டு
நின்றால், தொழிற்பெயராய் நின்று,
பயனிலை கொண்டும் உருபேற்றும் காலத்தைத் தோற்றுவித்தலும்,
பெயர்ப்பெயரும், பெயரது நிலையிலே நிற்றலையுடைய சொல்லுங்
காலத்தை யாண்டுந் தோற்றுவியாமையுங் கூறினார்.
இடுகுறியாய்ச் சாத்தன், கொற்றன் என வரும் பெயர்ப்பெயரும்,
புடைபெயர்ச்சி மாத்திரம் உணர்த்தி நிற்கும் ‘உண்டல்’ ‘தின்றல்’ என
வரும் வினைப்பெயரும், பூசல், வேட்டை என்றாற்போலப் புடை
பெயர்ச்சி விளக்காது நிற்கும் வினைப்பெயரும், உண்டான் தின்றான்
என்றாற் போலக் காலந் தோன்றி வினைமுதன்மேல் நின்ற படுத்தல்
|