நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   547
Zoom In NormalZoom Out


கவிரம் பெயரிய’ (அகம்.198:15) என்றாற் போல நின்றது. 

‘வினை, வினைக்குறிப்பு’ என்பன ஈண்டு ஆகுபெயர், அம்முதனிலை
களான் பிறந்த அச்சொற்களை உணர்த்தலின். 

‘முதல்’  என்றது  காரணத்தை.  ‘ஆயெட்   டென்ப  தொழின்முத
னிலையே’  (113)  என்றமையான்,  அக்காரணங்கள் எட்டு உளவேனும்,
‘ஏற்புழிக்கோடல்’ என்பதனாற் செயப்படுபொருளே ஈண்டுக் கோடும். 

காரியத்தை நிகழ்த்துவிப்பது காரணம். 

ஒரு வினைமுதல் செய்யுந் தொழிலினை உறுவது செயப்படு பொருள். 

(எ-டு.) குடத்தை வனைந்தான், குழையை உடையன் என வரும்.

 

‘எவ்வழி வரினும்’ என்றதனான், புகழை நிறுத்தல், புகழை உடைமை
என வினைப்பெயரிற் புடைபெயர்ச்சிபற்றியும் முடியும். 

இயற்றப்படுவதும்,  வேறுபடுக்கப்படுவதும்,  எய்தப்படுவதும்   எனச்
செயப்படு   பொருள்   மூன்றாம்.    அவை  முறையே   இல்லதனை
உண்டாக்கலும், உள்ளதனைத் திரித்தலும், தொழிற்பயனுறுந் துணையாய்
நிற்றலும்  ஆம்.  இவ்வுருபை  முடித்தற்கு  மேலிற்  ‘காப்பு’  முதலிய
வாய்பாடுபற்றிவரும் பொருள்களை இம்மூன்று கூற்றானும் பகுக்கின்றார்,
ஈண்டு வினைமாத்திரையும் வினைப்பெயருமாகப் பகுப்பர். 

‘குடத்தை   வனைந்தான்’  என்றது,   மேல்வரும்  ‘இழை’   என்னும்
இயற்றப்படும்  பொருள்.  அஃது  ‘எயிலை  இழைத்தான்’  என வரும்.
என்றது, ‘எயிலை இழைத்தலைச் செய்தான்’ என்னும் பொருட்டு. ‘இழை’
என்னும்  வினை மாத்திரையை  உணர்த்தும் முதனிலைப் பெயர் நின்று,
முன்னர்  ‘இழைத்தல்’   என    வினைப்பெயரையும்   தோற்றுவித்து,
‘இழைத்தலை’ என்னும் உருபையும் ஏற்பித்து, ‘செ