நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   549
Zoom In NormalZoom Out


பிரித்தலின்
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா
அன்ன பிறவும் அம்முதற் பொருள
என்ன கிளவியும் அதன்பால என்மனார். 

இஃது அதனை முடிக்கும் பொருள்வேறுபாடு கூறுகின்றது. 

(இ-ள்.) காப்பின்.....சிதைப்பின்  என்றா - காப்பு முதலாகச் சிதைப்பு
ஈறாகச்  சொல்லப்பட்ட  இருபத்தெட்டுப்  பொருளும்,  அன்ன பிறவும்
அம்  முதற்  பொருள  என்ன  கிளவியும் - அவை  போல்வன   பிற
பொருளுமாகிய அச் செயப்படுபொருள்மேல் வரும் எல்லாச் சொல்லும்,
அதன்பால என்மனார் - அவ்விரண்டாம் வேற்றுமையின் கூற்றன என்று
கூறுவர் புலவர், எ-று.
 

(எ-டு.) 1. எயிலை  இழைத்தான்   -  இவ்வியற்றப்படுவது   ஒரு
தன்மைத்து ஆகலின், ஒரு வாய்பாடே கூறினார்.
 

2. கிளியை  ஒப்பும்,  பொருளை இழக்கும்- இவற்றிற்கு வேறுபாடு, ஒரு
தொழில்  உறுவிக்கப்பட்டுத்  தானே  போதலும்,  தொழிற்பயன்  உற்ற
மாத்திரையாய்  ஒருவன் கொண்டுபோகப் போதலும்; நாணை அறுக்கும்,
மரத்தைக் குறைக்கும் - இவற்றிற்கு வேறுபாடு, சிறிதும் இழவாமல் வேறு
படுத்தலும், சிறிது இழக்க வே