நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   552
Zoom In NormalZoom Out


ம்  வினை  முதல்.  அது,  ‘கொடி    தன்னொடு   துவக்குதலைச்
செய்யப்பட்டான்  சாத்தன்’  என்னும் பொருட்டு. கொடியினது நிகழ்ச்சி,
ஈண்டுக்  கருவி.  கொடி  சாத்தனைத்   தொழிலுறுவிக்குங்கால்   தான்
அவனை  நீங்கா  உடனிகழ்ச்சியை  விளக்கிற்று  ஒடு   என்   உருபு
‘அரசனான் இயற்றப்பட்ட தேவ குலம்’ என்பது, ஏவும் வினைமுதல்.
 

இனி, கருவி, காரணம், ஏது,  நிமித்தம் என்பன, தம்முள் வேறுபாடு
உடையவேனும்,  ஒத்த பொருளன.   அக்காரணம்    முதற்காரணமும்
துணைக்   காரணமும்  என    இருவகைப்படும்.   முதற்காரணமாவது,
காரியத்தோடு     ஒற்றுமையுடையது;     துணைக்காரணமாவது,  அம்
முதற்காரணத்திற்குத்   துணையாகிய     வினை   முதலிய   எட்டும்.
அக்கருவியாவது,  வினைமுதற்  றொழிற்பயனைச் செயப்படுபொருட்கண்
உய்ப்பது.  அதுவும்  இயற்றுதற் கருவியாகிய காரகக் கருவியும், அறிதற்
கருவியாகிய  ஞாபகக்  கருவியும்  என  இருவகைப்படும்.  ‘ஊசியொடு
குயின்ற  தூசும் பட்டும்’ என்பது  காரகக் கருவி. அஃது, ‘ஊசிகொண்டு
சாத்தன் குயிலுதலைச் செய்யப்பட்ட தூசும் பட்டும்’ என்னும் பொருட்டு.
சாத்தன் தொழிற் பயனை  ஊசி  தூசிலும் பட்டிலும்  நிகழ்த்திற்று. இது
துணைக்காரணம். மண்ணான்  இயன்ற குடம் - முதற் காரணம். இதுவும்
காரகக் கருவி. ‘உணர்வினான்  உணர்ந்தான்,  புகையினான் எரியுள்ளது
உணர்ந்தான்-இவை ஞாபகக் கருவி. இவற்றிற்கு உணர்வு முதற்காரணம்.
கா