நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   555
Zoom In NormalZoom Out


றவாறு): இவை வினைமுதல் ஒடு உருபான் வந்தன. 

முயற்சியின்     பிறத்தலான் ஒலி நிலையாது: இதனுள் ‘முயற்சியின்’
என்பது  காரக ஏது; ‘பிறத்தலான் ஒலி நிலையாது’ என்பது ஞாபக ஏது.
ஐந்தாவதற்கு உரிய ஏதுவும் ஈண்டு ஓதினது, ஏதுவை வரையறுத்தற்கு.
 

‘அன்ன பிறவும்’  என்றதனான்,  கண்ணாற்கொத்தை:  இது  சினை
வினைமுதற்கு ஏறியது.
 

‘உறழ்மணியன்    உயர்மருப்பின’  (புறம். 22:2)   ‘பெண்டகையாற்
பேரமர்க் கட்டு’ : (குறள். 1083)- இவை, ஆன் ஒடுவாயின. ‘மனத்தொடு
வாய்மை  மொழியின்’  (குறள்.  295): ஒடு, ஆன் ஆயிற்று. மதியொடு
ஒக்கும்  முகம்:  இஃது  ஒப்பு.  சூலொடு கழுதை பாரம் சுமந்தது: இது
கட்புலனாகா  ஒரு  வினை  ஒடு. இவை முதலியன கொள்க. இவற்றின்
வேறுபாடு உய்த்துணர்க. (13)
 

நான்காம் வேற்றுமையின் பொருள்

76. நான்கா குவதே.
கு-வெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு ளாயினுங் கொள்ளும் அதுவே.
 

இது, முறையானே நான்காவது இப்பொருட்கண் வரும் என்கின்றது. 

(இ-ள்.) கு-எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி நான்காகுவதே-மேல்
கு   எனப்   பெயர்   கொடுத்து   ஓதப்பட்ட   வேற்றுமைச்  சொல்
நான்காவதாம்;
 

அது எப்பொருளாயினும் கொள்ளும்   -   அஃது  யாதானுமொரு
பொருளாயினும் அதனைத் தான் ஏற்று நிற்கும், எ-று.
 

(எ-டு.) அந்தணற்கு   ஆவைக்     கொடுத்தான்   என  வரும்.
மாணாக்கற்கு நூற்பொருள் உரைத்தான்