எனக் கொடைப் பொருளாகிய சொல்லா னன்றிப் பிற வாய்பாட்டாற் கூறுவனவும், மாணாக்கற்கு அறிவு கொடுத்தான் எனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கண்ணேயே
செல்லாது ஆண்டுத் தோன்றும் பொருளும் அடங்குதற்கு ‘எப்பொருளாயினும்’ என்றார். (14)
நான்காவதன் பொருள்பற்றி வரும் வாய்பாடுகள்
77.
அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின்
அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின்
அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பினென்ற
அப்பொருட் கிளவியும் அதன்பால என்மனார்.
இஃது, அதனை முடிக்க வரும் பொருள் வேறுபாடு கூறுகின்றது.
(இ-ள்.)
அதற்கு வினை உடைமை - ஒன்றற்கு ஒன்று பயன்படுதல்,
அதற்கு
உடம்படுதல் - ஒன்றற்கு ஒரு பொருளை மேற் கொடுப்பதாக
உடம்படுதல்,
அதற்குப்படு பொருள் - ஒன்றற்கு உரிமை உடையதாகப்
பொதுவாகிய
பொருள் கூறு இடப்படுதல், அது ஆகு கிளவி- உருபு
ஏற்கும் பொருள்
தானேயாய்த் திரிவதொரு பொருண்மை, அதற்கு
யாப்புடைமை - ஒன்றற்கு
ஒன்று பொருத்தமுடைத்தாதல்,
அதற்பொருட்டு ஆதல்- ஒரு பொருளினைமேற்பெறுதல் காரணமாக
ஒரு தொழில் நிகழ்தல், நட்பு - ஒன்றற்கு ஒன்று
நட்பாதல், பகை-
ஒன்றற்கு ஒன்று பகையாதல், காதல் - ஒன்றற்கு
ஒன்று
காதல் உடைத்தாதல், சிறப்பு - ஒன்றற்கு ஒன்று சிறத்தல்,
|