ம் என்கின்றது.
(இ-ள்.)
இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி ஐந்தாகுவதே
-மேல் எனப் பெயர் கொடுத்து ஓதிய வேற்றுமைச் சொல் ஐந்தாவதாம்;
அது ‘இதனின் இற்று இது,’ என்னும் - அஃது ‘இப்பொருளின்
இத்தன்மையாய் இருக்கும் இப்பொருள்’ என்னும் பொருண்மையை உணர்த்தும், எ-று.
ஐந்தாவது, பொருவும் எல்லையும் நீக்கமும் ஏதுவும் என நான்கு வகைப்படும். பொரு, உறழ் பொருவும் உவமப்
பொருவும் என இருவகைப் படும். உறழ்தல், ஒன்றனின் ஒன்றை மிகுத்தல். ஏதுவும் காரக ஏதுவும் என இருவகைப்படும். ஞாபக ஏது முன்கூறிற்று. காரக ஏது, ‘அச்சம், ஆக்கம்’ (79) என்பனவற்றான் பெறப்படும். நீக்கப் பொருண்மை, ‘தீர்தல், பற்றுவிடுதல்’ (79) என்பனவற்றான் பெறப்படும். ஏனை இரண்டும் ‘இதனின் இற்று இது’ என்பதனான் பெறப்படும், அவ் விரண்டனையும் அஃது இருமுறையான் உணர்த்தும் ஆதலின். எல்லைப் பொருள், கருவூரின் கிழக்கு இவ்வூர், இதனின் ஊங்கு என வரும். இவையும் ‘இற்று’ என்னும் பொருள. (16)
ஐந்தாவதன் பொருள் பற்றி வரும் வாய்பாடுள்
79.
வண்ணம் வடிவே யளவே சுவையே
தண்மை வெம்மை அச்ச மென்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை யென்றா
முதுமை
|