நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   561
Zoom In NormalZoom Out


வளவன் கொல்லி மீமிசை’ என வரும். 

ஒன்று     பல  குழீஇயதும்,  வேறு  பல  குழீஇயதும்,  ஒன்றியற்
கிழமையும்,   உறுப்பின்  கிழமையும்,  மெய்திரிந்து  ஆயதும்  எனத்
தற்கிழமை   ஐந்து   வகைப்படும்,  ‘ஐம்பால்  உரிமையும்  அதன்தற்
கிழமை.’   என்பது  அகத்தியம்  ஆதலின்.  பொருளின்  கிழமையும்,
நிலத்தின்  கிழமையும்,  காலத்தின் கிழமையும் எனப் பிறிதின் கிழமை
மூவகைப்படும். (18) 

ஆறாவதன் பொருள்பற்றி வரும் வாய்பாடுகள் 

81. இயற்கையின் உடைமையின முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையி னென்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி யுறுப்பின் குழுவி னென்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்துவேறு படூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கின் தோன்றுங் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்.
 

இஃது, அதனை முடிக்க வரும் பொருள் வேறுபாடு கூறுகின்றது. 

இயற்கை_ வாழ்ச்சியின் - இயற்கை   முதலாக   வாழ்ச்சி  ஈறாகச்
சொல்லப்பட்டனவும், திரிந்து வேறு படூஉம் அன்ன பிறவும்-ஒரு சாரன
திரிந்து  வேறுபடும்  அவை  போல்வன பிறவுமாகிய, கூறிய மருங்கின்
தோன்றும் கிளவி-முற்கூறிய கிழ