என மூவகைக் குறிப்பின்கண்ணும் தோன்றும், எ-று.
எனவே, ஏழாவது இடப்பொருட்டு ஆயிற்று.
(எ-டு.) தட்டுப்புடைக்கண் வந்தான், மாடத்தின்கண் இருந்தான், கூதிர்க்கண் வந்தான் என வரும். இவை இடமும் இடத்து நிகழ் பொருளும் வேறாய் வந்தன.
குன்றத்தின்கண் குவடு - இஃது அவ்விரண்டும் ஒன்றாய் வந்தது. ‘குறிப்பின் தோன்றும்’ என்றது, ‘அவற்றை இடம் எனக் கருதியவழியே அவ்வேழன் உருபு தோன்றுவது; அல்லுழித் தோன்றாது,’ என்றவாறு. (20)
ஏழாம் வேற்றுமையின் உருபுகள்
83.
கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
முன்னிடை கடைதலை வலமிடம் எனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.
இஃது, இவ்வேழாவதற்கு முடிக்க வரும் பொருள் வேறுபாடின்றி உருபின் பாகுபாடே உடைமையின், உருபின் பாகுபாடே கூறுகின்றது.
(இ-ள்.) கண் - கண் என்னும் பொருளும், கால்.... புடை - கால் முதலாகப் புடை ஈறாகச் சொல்லப்பட்ட உருபுகளும், தேவகை எனா - தேவகை என்னும் திசைக்கூற்றுப் பொருண்மையும், முன் - இடம் எனா - முன் முதலாக இடம் ஈறாக ஓதப்பட்ட உருபுகளும், அன்ன பிறவும் - அவை போல்வன பிற உருபுகளும், அதன்பால என்மனார் - ஏழாவதன் கூற்றன என்று கூறுவர் புலவர், எ-று.
இச்சூத்
|