நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   565
Zoom In NormalZoom Out


திரத்தாற்     கூறிய    உருபுகள்   ஓர்   இடத்தின்  ஏகதேசத்தினை
வரையறுத்து   உணர்த்தும்வழி   ஆறாவதனை   உணர்த்தியும்   ஓர்
இடத்தினை  வரையறுத்துணர்த்தாது  கண்  என்பதுபோல  இடம் என
முழுதுணர்வு  செல்ல  நின்றவழி ஏழாவதனையே உணர்த்தியும் நிற்கும்
சிறப்பின்மை    கருதி   வேறாக   எடுத்து   ஓதினார்.   ஏழாவதற்கு
இம்மூவகைப்   பொருட்பாகுபாடு   அன்றி   வேறு  பொருட்பாகுபாடு
இன்மையின்,    முன்னையன    போலப்   பொருளினைப்   பகுத்து
ஓதாராயினர். 

ஆசிரியர் ‘கூறிய முறையின் உருபு’ (70) ‘இறுதியும் இடையும்’ (104)
என்னும்   சூத்திரங்களான்  பெயர்  இறுதியிலும்  முடிக்கும்  சொற்கு
முன்னும்   நிற்பது   உருபு   என்று   கூறினமையான்,  பொருளிடை
நில்லாமையும் பெற்றாம். 

சிறந்த  கண் என்னும் உருபை முற்கூறி, ஈண்டுக் கண் என்பதனைச்
சிறப்பில்லா   உருபுகளோடு  எடுத்து  ஓதினார்,  ‘கண்ணகல்  ஞாலம்’
(திரி.கடு.வாழ்த்து.) என்புழி அக்‘கண்’ ஞாலந்தன்னையே உணர்த்தி ஓர்
இடத்தினை   வரையறுத்து   உணர்த்தாது  நிற்பதோர்  இடைச்சொல்
என்பது உணர்த்துதற்கு. 

‘தே வகை’  என்னும்  பொருள்  வரையறைப்படாது,  சொல்லுவான்
குறிப்பிற்றாய் நிற்றலின், இடத்துள் அடக்காராயினார். 

இவ்விரண்டு பொருட்கும்    வேறொரு    சூத்திரஞ்    செய்யாது
இவ்வுருபுகளுடனே ஓதினர், சூத்திரம் சுருங்குதற்கு. 

(எ-டு.)  ஊர்க்கால்    இருந்தான்,    ஊர்ப்புறத்து,    இருந்தான்,
மாடத்தகத்து இருந்தான், ஊருள் இரு