ந்தான், சான்றோருழைச் சென்றான், மாடத்துக்கீழ் இருந்தான், மாடத்துமேல் இருந்தான், ஏர்ப்பின் சென்றான், காட்டுச்சார் ஓடும் களிறு, ஊரயல் இருந்தான், ஊர்ப்புடை இருந்தான், வடக்கண் வேங் கடம், தேர்முன் சென்றான், சான்றோரிடை இருந்தான், கோயிற்கடைச் சென்றான், தந்தைதலைச் சென்றான், கைவலத்து உள்ளது கொடுக்கும், கையிடத்துப் பொருள் என வரும்.
‘அன்ன பிற’ வான் வருவன, குடத்தில் விளக்கு, ஊரிலே இருந்தான், ‘கிழவோள் தேஎத்து,’ (இறை. சூ.8) கிழவிமாட்டு எனவும், பொருட்கண் உணர்வு, மலர்க்கண் நாற்றம், ஆகாயத்துக்கண் பருந்து எனவும் வரும். இன்னும், மணியின்கண், ஒளி, கையின்கண் விரல், நிறத்தின்கண் எழில், ஆடற்கண் அழகு எனக் கிழமையும் சினையும் பண்பும் வினைப்பெயரும் பற்றி வரும்.
இனி, ‘கண் கால் முதலியன உருபை விளக்குதற்கு அவ்வுருபின் பொருளாய நின்று, கண்ணென் உருபு விரித்துக்கொண்டு நிற்கும்,’ எனின், ‘கண் என்னும் உருபின் பொருளாவது, கண் என்னும் இடைச் சொல்லான் உணர்த்தப்படும் இடப்பொருண்மை,’ என்று பொருள் உரைத்தால், பின் வருகின்ற இடப்பொருண்மை முன்னுங் கூறிற்றேயாம் ஆகலின், கூறியது கூறிற்றாம். அல்லதூஉம், ‘கண்ணகல் ஞாலம்’ என்புழிக் கண் என்னும் இடைச் சொல்லான் உணர்த்தும் இடப்பொருண்மைக்கும்
‘இடத்துக்கண்’
எனக் கூறிய இப்பொருண்மைக்கும் வேறு கண்ணென் உருபு மீண்டுங் கூறல் வே
|