வண்டும். அல்லதூஉம், ‘கண்ணின்று கூறுதல் ஆற்றான்
அவனாயின்’ (கலி. 37:8) என்பது ‘என்கணின்று’ எனத் தோன்றா எழுவாயாய் நின்று கண்ணென் உருபு ஏற்று நின்றதாம். அல்லதூஉம், வடக்கண் வேங்கடம் என்புழிக் கண்ணென் உருபு விரித்தலின், ஒழிந்தவற்றிற்கு ஒவ்வாதாம். அல்லதூஉம், ஆலின்கீழ்க் கிடந்த ஆ, மரத்தின்மேல் இருந்த குரங்கு என்பன முதலியவற்றிற்குக் கண்ணெனுருபு கொடுத்து உலகம் வழங்காமை உணர்க. முன்னர் இரண்டாவது முதலிய உருபுகளை முடித்தற்கு எடுத்து ஓதிய காப்பு முதலிய பொருள்களைப் போல உருபை முடித்து நில்லாது ஈண்டுக் கூறிய பொருள்கள் கண் என்னும் உருபையே உணர்த்தி நின்றன என்றலின்,
சேனாவரையரும் இப் பொருள்களை உருபு என்றே கூறினா ராயிற்று. அங்ஙனங் கூறி அத்துச் சாரியை கொடுத்து உதாரணங் காட்டவே, உருபின் பின்னரும் அத்துச் சாரியை வருதல் தாமும் நேர்ந்தா ராயிற்று. (21)
வேற்றுமை அன்மொழித் தொகைகளை விரிக்கும் முறை
84.
வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
ஈற்றுநின் றியலுங் தொகைவயின் பிரிந்து
பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்
எல்லாச் சொல்லும் உரியவென்ப.
இது, வேற்றுமை தொக்குழி விரிக்குமாறும். அதற்கு இனமாகிய அன்மொழி தொக்குழி விரிக்குமாறும் கூறுகின்றது.
(இ-ள்.)
வேற்றுமைப் பொருளை ஈற்று நின்று இயலும் தொகை வயின் பொருளை விரிக்கும் காலை - வேற்றுமைத் தொகைவயின் நின்ற பொருளை, அன்மொழித் தொகைவயின் நின்றபொருளை, விரிக்குங் காலத்து; பொருள் புணர்ந்து - அவ்வேற்றுமைப் பொருளொடும் அன் மொழிப் பொரு
|