நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   568
Zoom In NormalZoom Out


ருளோடும் புணர்ந்து,  பல்  ஆறு  ஆகப் பிரிந்து இசைக்கும் எல்லாச்
சொல்லும்   உரிய  என்ப-பலநெறியாகப்  பிரிந்து  ஒலிக்கும்  எல்லாச்
சொல்லும் விரித்தற்கு உரிய என்று கூறுவர் ஆசிரியர், எ-று. 

மேலும், ‘ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே’ (418) என்பர். 

கருங்குழற்பேதை,     பொற்றொடி  அரிவை,  மட்குடம்  என்னும்
வேற்றுமைத்     தொகைகள்,    கருங்குழலை    உடைய    பேதை,
பொற்றொடியை  அணிந்த  அரிவை,  மண்ணான்  இயன்ற குடம் என
விரிந்தவாறு காண்க. 

தாழ்,     குழல், பொற்றொடி,  மட்காரணம் என்னும் அன்மொழித்
தொகைகள்,  தாழ்  குழலை  உடையாள், பொற்றொடியை அணிந்தாள்,
மண்ணாகிய காரணத்தான் இயன்றது. என விரிந்தவாறு காண்க. (22) 

வேற்றுமையியல் முற்றிற்று.