ளவிக்கு - சினைப்பொருள்மேல் நிற்கும் சொல்லிற்கு, ஐயும் கண்ணும்
வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர் - இண்டாவதும் ஏழாவதும்
வினைகூறும் நிலைமைக்கண் ஒக்குமென்று கூறுவர் புலவர், எ-று.
(எ-டு.) கோட்டைக் குறைத்தான், கோட்டின்கண் குறைத்தான் என
வரும்.
‘அறுத்தல் குறைத்தல் முதலிய இரண்டாவதன்கண் ஏழாவது வந் வழக்குப் பயிற்சி நோக்கி, ‘வினைநிலை ஒக்கும்’ என்றார். (2)
இதுவும் அது
87.
கன்றலுஞ் செலவும் ஒன்றுமார் வினையே.
இதுவும் அது.
(இ-ள்.) கன்றலும் செலவும் - கன்றற்பொருள்மேல் வருஞ் சொல்லும், செலவுப் பொருள்மேல் வருஞ் சொல்லும், ஒன்றுமார் வினையே- இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் ஒரு தொழில, எ-று.
(எ-டு.) சூதினைக் கன்றினான், சூதின்கண் கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கண் சென்றான் என வரும்.
பொருள்பற்றி ஓதினமையான் சூதினை இவறினான், சூதின்கண் இவறினான்; நெறியை அடைந்தான், நெறிக்கண் அடைந்தான் எனவும் வரும்.
இஃது இரண்டாவதன் பொருளை எடுத்தோதலின், வேறுகூறினார். வழக்கின்கண் பயின்றுவருதலின், ஏழாவதனையும் ஒப்பக்கூறினார். சினை முதல் மயக்கங் கூறுகின்றதற்கு இடையே இச்சூத்திரம் வைத்தார், இரண்டாவதும் ஏழாவதும் அதிகாரத்தாற் பெறுகின்ற இயைபு நோக்கி. (3)
முதற்சினைக் கிளவிக்கு உருபுகள் வருமாறு
முதற்சினைக் கி
|