நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   571
Zoom In NormalZoom Out


ளவிக் கதுவென் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கை வருமே.
 

இஃது, உருபுகள் மயக்கமாய் வருவனவற்றைக் கூறுமாறு கூறுகின்றது.

(இ-ள்.)    முதல் சினைக் கிளவிக்கு-முதற்சொல்லொடு தொடர்ந்த
சினைச்சொல்லிற்கு,  அது என் வேற்றுமை முதற்கண் வரின் - ஆறாம்
வேற்றுமை  முதற்கண்ணே வருமாயின், சினைக்கு ஐ வரும் - சினைச்
சொல்லின்கண் இரண்டாம் வேற்றுமை வரும், எ-று. 

(எ-டு.) யானையது கோட்டைக் குறைத்தான், என வரும். 

இஃது ஒரு தொடர்க்கண் இரண்டுருபு வருதலின் மயக்கமாயிற்று. (4)

இதுவும் அது 

88. முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப
 

இதுவும் அது. 

(இ-ள்.) முதல் முன் ஐ வரின்-அம்முதற்சினைக் கிளவிக்கண் முதற்
சொல்  முன்  இரண்டாம்  வேற்றுமை  வரின்,  சினைமுன் கண் என்
வேற்றுமை  வருதல் தெள்ளிது என்ப - சினைச்சொல் முன் கண்-என்
வேற்றுமை வருதல் தெள்ளிதென்று கூறுவர் ஆசிரியர், எ-று. 

(எ-டு.) யானையைக் கோட்டின்கண் குறைத்தான். 

‘தெள்ளிது’    என்றதனான், யானையைக் கோட்டைக் குறைத்தான்,
என  ஐகாரம் வருதலும், முன்னர்க் கூறிய எல்லாம் பண்பும் தொழிலும்
பொருள் தொடர்ச்சியும் பற்றி வருதலுங் கொள்க. 

மணியது     நிறத்தைக்   கெடுத்தான்,   மணியை  நிறத்தின்கண்
கெடுத்தான்,   மணியை   நிறத்தைக்  கெடுத்தான்-என  முற்கூறியதும்
இவையும்,   ஒரு  தொடரின்  இரண்டு  உருபும்  மயங்கலின்,  உருபு
மயக்கம். 

தலைமகனது செலவை