ாருண்மையுமாம், எ-று.
(எ-டு.) ‘வானோக்கி வாழும்’, (குறள். 542) என்பது விரியும்வழி ‘வானை நோக்கி வாழும்’ என ‘வானான் ஆய பயனைக் கருதி உயிர்வாழும்’ எனவும் வானின் ஆய பயனைக் கருதி உயிர்வாழும்’ எனவுஞ் செயப்படு பொருளும் ஏதுவும் ஒப்பப் பிறந்து நிற்றல் இச்சூத்திரத்திற்குக் கருத்து. இஃது உருபும் பொருளும் மயங்கிற்று. (10)
உயர்திணைத் தொகைக்கண் நான்கன் உருபும்
உடைமைப் பொருளும் விரிதல்
94.
அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
அதுவென் உருபுகெடக் குகரம் வருமே.
இஃது, ஆறாவதற்கு ஓதிய முறைப்பொருட்கண் நான்காவது விரியுமாறும், ஆறன் உருபு கெட அதன் உடைமைப்பொருள் விரியுமாறுங் கூறுகின்றது.
(இ-ள்.) உயர்திணைத் தொகைவயின் குகரம் வரும்-உயர் திணைப் பொருள் இரண்டு சேர்ந்தவிடத்து உருபு விரிப்புழி நான்கண் உருபு விரியும், அது என் வேற்றுமை அது என் உருபு கெட வரும் - அதுவன்றி அவ் வுயர்திணைத் தொகைவயின் ஆறம் வேற்றுமையை விரிப்புழி அவ்வது என் உருபு தான் கெட்டுப்போக அதன் உடைமைப் பொருள் விரியும், எ-று.
(எ-டு.) ‘நம்பி மகன்’ என்னுந் தொகை, ‘நம்பிக்கு மகன்’ என விரியும், இஃது உருபு மயக்கம். இனி, ‘நின்மகள், பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு’ (அகம். 48: 1) ‘யாம்எம் மகனைப்பாராட்ட’ (கலி.85: 29) ‘என்னணியியற் குறுமகள் ஆடிய’ (நற்.184) என்பவற்றுள் அது என் உருபு கெட, அதன் உடைமைப் பொருள் விரிந்தவாறு காண்க.
இவை உருபு நிலைக்களத்துப் பொருள் மயங்கின. இவற்றிற்கு நான்கன் உருபு விரிப்பின், ‘நினக்கு மகளாகியவள், எனக்கு மகனாகியவனை, எனக்கு மகளாகிய குறுமகள்’ என ஆக்கம் கொடுத்துக் கூறல் வேண்டு
|