103.
வற்றுமைக் கிளவி
ஒருசொல் நடைய பொருள்செல் மருங்கே.
இது, பல உருபு தொடர்ந்து அடுக்கியவழிப் படுவதோர் இலக்கணம் கூறுகின்றது.
(இ-ள்.) உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி - ஓர்
உருபும் பல உருபும் தம்முள் தொடர்ந்து அடுக்கி வந்த வேற்றுமை
உருபை இறுதி யாக உடைய சொற்கள், ஒரு சொல் நடைய-முடிக்கும்
சொல் ஒன்றனான் முற்றுப்பெற்று நடக்கும், பொருள் செல்
மருங்கே-அவ்வொன்றனான் பொருள் செல்லும் பக்கத்து, எ-று.
(எ-டு.) ‘என்னொடும் நின்னொடுஞ் சூழாது’ (அகம். 128:7) ‘துடுப்பெனப் புரையு நின் திரண்டநேர் அரிமுன்கைச் சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும் விளையாட.........’ (கலி.59: 4-6)
என்புழி முன் கையான் தூதையானும் பாவையானும் விளையாட என அடுக்கி முடிந்தது.
‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்’ (குறள். 543), யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான் என வரும்.
இச்சூத்திரத்தின் கருத்து, முன்னர்ப் பல உருபு தொடர்ந்த சொற்கள் ஒருசொல்லான் முடிதலும், ஓர் உருபு தொடர்ச்சியும் ஒரு சொல்லான் முடிதலுங் கூறுதலாயிற்று.
கோட்டை நுனிக்கண் குறைத்தான் என்புழி முன்மொழிக்கண் பொருள் நிற்றலானும், தினையிற் கிளியைக் கடியும், என்புழிப் பின் மொழிக் கண் பொருள் நிற்றலானும், இவற்றை அடையென்று கூறுதல் பொருந்தாது என்றுணர்க. (19)
வேற்றுமை உருபு விரிந்து நிற்கும் இடம்
104.
இறுதியும் இடையும் எல்லா உருபும்
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்.
இஃது உருபு நிற்கும் இடம் கூறுகின்றது.
(இ-ள்.) இறுதியும் இடையும் - வேற்றுமைத்தொடர் இறுதிக்கண்ணும் அதன் இடைநிலத்தும், எல்லா உருபும் - ஆறு உருபும், நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் - தத்தமக்கு ஓதிய பொ
|