நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   582
Zoom In NormalZoom Out


தலும், உருபு தானே தொகுதலும் உடைய. 

(எ-டு.) கடந்தான் நிலம். இருந்தான் குன்றத்து, என வரும். 

நிலங்     கடந்தான், தாய்மூவர், கருப்பு வேலி, வரை வீழ் அருவி,
சாத்தன்  கை,  ‘குன்றக்  கூகை, (குறுந். 153) என வரும். இவை உருபு
தொக்கன.   ‘படைக்கை’   என்பது   உருபும்  பொருளுந்  தொக்கது.
சாத்தன்தனது எனத் தன்னையும் ஏற்றல் உரையிற்கொள்க. (21)
 

எய்தியது விலக்கல்

106. ஐயுங் கண்ணும் அல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகாஅ இறுதி யான.
 

இஃது, எய்தியது விலக்கிற்று. 

ஐயும் கண்ணும் அல்லாப் பெருள்வயின் மெய் உருபு-ஐகார
வேற்றுமைப் பொருளும் கண்ணென் வேற்றுமைப் பொருளும் அல்லாத
பிற  பொருள்மேல்  நின்ற  உருபு, இறுதியான தொகா - தொடர்மொழி
இறுதிக்கண் தொக்கு நில்லா, எ-று. 

(எ-டு.) அறம்  கறக்கும். என்பது ‘கறக்கும் அறம்’ என இறுதிக்கண்
தொகாமை காண்க.
 

‘தண்வரல்     வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.’ (குறுந்.35) என
ஆன்  உருபு  இறுதிக்கண்  தொக்கதால்  எனின், அது வினைச்சொல்
காரணப் பொருட்டாய் நின்றது. (22) 

உருபுகள் தம் பொருள அன்றி மயங்குமாறு

107. யாதன் உருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.
 

இஃது, உருபுகள் தம் பொருள அன்றி மயங்குமாறு கூறுகின்றது. 

(இ-ள்.) யாதன் உருபிற் கூறிற்றாயினும்-ஒரு தொடர் யாதானும் ஒரு
வேற்றுமையது உருபு கொடுத்துச் சொல்லப்பட்டது ஆயினும் (அவ்வுரு
பேற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் பொருள் இயையாத வழி),
பொருள்   செல்  மருங்கின்  வேற்றுமை  சாரும்-பொருள்  செல்லும்
பக்கத்து வேற்றுமையைச் சாரும்,