நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   586
Zoom In NormalZoom Out


முறையான், எ-று. 

(எ-டு.)  நூலது  குற்றங்  கூறினான்.  நூலைக்  குற்றங் கூறினான்;
அவட்குக்  குற்றேவல்  செய்யும்,  அவளது  குற்றேவல் செய்யும்-என
வரும். பிறவும் அன்ன. (28) 

தொழில் முதனிலை எட்டாவன

113. வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலங் கருவி யென்றா
இன்னதற் கிதுபய னாக வென்னும்
அன்ன மரபின் இரண்டொருந் தொகைஇ
ஆயெட் டென்ப தொழின்முதல் நிலையே.
 

இது, வேற்றுமைப் பொருள்கள் தோன்றும் இடம் கூறுகின்றது. 

(இ-ள்.)  வினையே  - வினைப்பெயரையும்   வினைச்சொல்லையுந்
தோற்றுவிக்கும்  உண்  தின்  செல் கொள் வனை என்பன முதலாகிய
வினையும்,  செய்வது -  அவ்வினையைச்     செய்யும் வினைமுதலும்,
செயப்படு   பொருளே  -  அவ்வினைமுதல்    அதனைச்    செய்ய
அத்தொழிலையுறும் பொருளும்,  நிலனே- அத்தொழிலைச்  செய்கின்ற
இடமும்,   காலம்   -   அத்தொழிலைச்  செய்யுங் காலமும், கருவி -
அவ்வினைமுதல்   தொழிலினைச்    செய்யுங்    காலத்து  அதற்குத்
துணையாங் கருவிகளும் ஆகிய  ஆறும்,  இன்னதற்கு - ஒரு பொருள்
நின்று அவ்வினைமுதல்     செய்யப்பட்டதனை      ஏற்றுக்கோடற்கு
உபகாரமாக,    இது    பயன்   ஆக   -   அப்பொருள்   அதனை
ஏற்றுக்கொண்டதனான்    அவ்வினைமுதற்கு   இப்பயன்   உண்டாக,
என்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ-என்று சொல்லப்படும்
அத்தன்மைத்தாகிய  முறைமையினையுடைய   இரண்டொடுந்  தொக்கு,
தொழில்  முதனிலை  ஆயெட்டு   என்ப -காரியத்திற்கு  முன்னிற்கும்
காரணம் அவ்வெட்டு என்று சொல்லுவர் புலவர், எ-று. 

‘ஆக’ என்றதனை ‘இன்னதற்காக’ என்றுங் கூட்டுக. 

(எ-டு.)  வனைந்தான்  என்றவழி   ‘வனை’  என்னும்  வினையும்,
வனைந்த கருத்தாவும், வனையப்பட்