தண்டூண் ஆதற்குக் கிடந்த மரத்தைத் ‘தண்டூண்’ என்றுங் காரியத்தின் பெயரைக் காரணத்திற்கு இட்டு வழங்குவனவும், எழுத்து, சொல், பொருள் என்பனவற்றிற்கு இலக்கணங் கூறிய அதிகாரங்களை ‘எழுத்து, சொல் பொருள்’ என்பன உணர்த்தி நிற்றலுங் கொள்க.
|
‘பிற’ என்னாது ‘வேறு’ என்றதனான், அவை ‘தொல்காப்பியம், கபிலம், வில்லி, வாளி’ என ஈறு திரிதலுங் கொள்க.
|