ணயிடத்து மெய்ப்பொருளைக் கருதின விளி கொள்ளும் உயிர் ஈற்றுப்பெயர், இ உ ஐ ஓ என்னும் இறுதி அப்பால் நான்கே - இ உ ஐ ஓ என்னும் இறுதியை உடைய அக்கூற்று நான்கு பெயரும், எ-று.
‘மெய்ப்பொருள்’ என்றதனான், அஃறிணைப்பெயர் அன்மொழியாய் உயர்திணைக்கண் வந்துழி உயர்திணைப் பெயராய் விளி ஏற்றலும், அவ்வீற்று அஃறிணைப்பெயர்களும் உயர்திணைப் பெயர்கள் போல விளி ஏற்றலுங் கொள்க.
(எ-டு.) ‘சுடர்த்தொடீஇ! கேளாய்.’(கலி. 51:1) எனவும், ‘தும்பீ!’ (குறுந். 2) எனவும், ‘சிறு மீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய்!’ (ஐந்.எழு.68) எனவும் ‘கொன்றாய்! குருந்தே! கொடிமுல்லாய்! வாடினீர், நின்றீர் அறிந்தேன் நெடுங்கணாள் - சென்றாளுக்கு’ (திணைமாலை நூற். 81) எனவும் வரும். (3)
இகர ஐகார ஈறுகள்
123.
அவற்றுள்,
இஈ ஆகும் ஐஆய் ஆகும்.
இஃது, இகர ஈறும் ஐகார ஈறும் விளி ஏற்குமாறு கூறுகின்றது.
(இ-ள்.) அவற்றுள்-முற்கூறிய நான்கு ஈற்றுப் பெயருள், இ ஈ ஆகும் - இகர ஈற்றுப் பெயர் ஈகாரமாயும், ஐ ஆய் ஆகும் - ஐகார ஈற்றுப்பெயர் ஆய் ஆயும் ஈறு திரிந்து விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) நம்பி - நம்பீ! நங்கை-நங்காய்! என வரும் (4)
ஓகார உகர ஈறுகள்
124.
ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்.
இஃது, ஒழிந்தன விளி ஏற்குமாறு கூறுகின்றது.
(இ-ள்.) ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்-ஓகார ஈற்றுப் பெயரும் உகர ஈற்றுப் பெயரும் ஏகாரத்தொடு பொருந்திப் பிறிது வந்து அடைதலாய் விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) கோ-கோவே! வேந்து- வேந்தே! என வரும். (5)
125.
உகரந் தானே குற்றிய லுகரம்.
இஃது, ஐயம் அறுக்கின்றது.
(இ-ள்.) உகரந்தானே குற்றியலுகரம்-மேற்கூறப்பட்ட உகரமாவது குற்றியலுகரம், எ-று.
‘திரு-திருவே!’ (சீவக. 2121) எனச் சிறுபான்மை முற்றியலுக
|