’(சீவக. 1594) என ஈர் பெற்றும், ‘கேளிர்! வாழியோ கேளிர் நாளும்’ (குறுந். 280) என இயல்பாயும், யகர ஈறு, ‘விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்!’ (புறம். 130:1) என இயல்பாயும், ‘ஆயே!’ என ஏகாரம் பெற்றும் வருதலுங் கொள்க.
இனி,
‘கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக்
கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள்’
(தொல்.பொ..)
என்றும்,
‘கிழவோட் குவமம் ஈரிடத் துரித்தே’ (தொல்.பொ..)
‘கிழவோற் காயின் இடம்வரை வின்றே’ (தொல்.பொ..)
என்றும் பிறாண்டும் உடம்பொடு புணர்த்துக் கூறிய ‘ஓன்’ என்றும் ஈறு, ‘தொழிலிற் கூறும் ஆன்என் இறுதி’ (135) போல யகாரமாய் விளி ஏற்றலுங் கொள்க. அது, ‘பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!’ (புறம்.202:21) ‘மா அயோய்! (பரி. 3:1) என்றாற்போலச் செய்யுள்களுள்ளும் வருவனவுங் கொள்க. ஓகாரம் அடுத்த ளகார ஈறு விளியேற்கு மேனும் உணர்க.
‘ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணி’
என்றாற் போலும் அண்மை விளியும் இதனாற்கொள்க. (12)
* (பாடம்) ஊர்ந்து.
அவற்றுள் னகார அன் என்னும் ஈறு
131.
அவற்றுள்,
அன்னென் இறுதி ஆவா கும்மே.
இது, முறையானே னகார ஈற்றுள் அன் ஈற்றுப்பெயர் விளி ஏற்குமாறு கூறுகின்றது.
(இ-ள்.) அவற்றுள் அன் என் இறுதி, ஆ ஆகும்மே- அந்நான்கு ஈற்றுப் பெயருள் ‘அன்’ என்னும் னகர ஈற்றுப்யெர் ஆவாய் விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) துறைவன்-துறைவா! ஊரன் - ஊரா! சோழன் - சோழா! சேர்ப்பன்- சேர்ப்பா! என வரும். (13)
அதன்கண் அண்மை விளி
133.
அண்மைச் சொல்லிற் ககர மாகும்.
இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
(இ-ள்.) அண்மைச்
சொல்லிற்கு அகரம் ஆகும்-அண்மை விளிக் கண் ‘அன்’ ஈறு அகரமாகும், எ-று.
(எ-டு.) துறைவன் - துறைவ! ஊரன் - ஊர! சோழன்- சோழ! என வரும். (14)
ஆன் என்னும் ஈறு
134.
ஆனென் இறுதி இயற்கை யாகும்.
இஃது, ‘ஆன்’ என்பது விளி
|