நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   599
Zoom In NormalZoom Out


ஏற்குமாறு கூறுகின்றது. 

(இ-ள்.) ஆன் என் இறுதி இயற்கை  ஆகும்-‘ஆன்’ என்னும் னகர
ஈற்றுப்பெயர் இயல்பாய் விளி ஏற்கும், எ-று. 

‘சேரமான்! மலையமான்! எனக் கூவுதற்கண்ணும் அவ்வாறே நிற்றல்
காண்க. (15) 

அவ்வீற்று வினையாலணையும் பெயர்

135. தொழிலிற் கூறும் ஆனென் இறுதி
ஆய்ஆ கும்மே விளிவயி னான.
 

இஃது, எய்தியது, விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. 

(இ-ள்.)      தொழிலிற்கூறும்     ஆன்     என்     இறுதி
விளிவயினான-தொழிலினான்  ஒரு பொருள் அறியச் சொல்லும் ‘ஆன்’
ஈற்றுப் பெயர் விளி ஏற்குமிடத்து, ஆய் ஆகும்-‘ஆய்’ ஆம், எ-று. 

(எ-டு.)  வந்தான்-வந்தாய்!   சென்றான்-சென்றாய்!   என  வரும்.
‘தொழிலின்  ’என்றதனான்,  ‘கழலாய்!  இடையாய்!’ எனக் குறிப்பினும்
கொள்க. (16) 

அவ்வீற்றுப் பண்புப் பெயர்

136. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. 

இதுவும் அது. 

(இ-ள்.)  பண்பு  கொள் பெயரும் அதனோரற்றே - ‘ஆன்’ ஈற்றுப்
பண்பைக் கொண்டு நின்ற பெயரும் அவ்வீற்றுத் தொழிற் பெயர் போல
‘ஆய்’ ஆய் விளி ஏற்கும், எ-று. 

(எ-டு.) கரியான் - கரியாய்! தீயன்-தீயாய்! என வரும். (17) 

அவ்வீற்று அளபெடைப் பெயர்

137. அளபெடைப் பெயரே அளபெடை இயல. 

இஃது, எய்தாதது எய்துவித்தது. 

(இ-ள்.)  அளபெடைப்பெயரே  அளபெடை  இயல - ‘ஆன்’ ஈற்று
அளபெடைப்பெயர் இகர ஈற்று அளபெடைப்பெயர் போல (127) மூன்று
மாத்திரையின் நீண்டு இயல்பாய் விளி ஏற்கும், எ-று. 

(எ-டு.)  உழாஅஅன்!   கிழாஅஅன்!   என    வரும்.    இஃது,
அளபெடுத்தலின், ‘ஆன் ஈற்றின் அடங்காதாயிற்று. (18) 

னகர ஈற்று முறைப்பெயர்

138. முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே 

இதுவும் அது. 

(இ-ள்.) முறைப்பெயர்க் கிளவி ஏயொடு  வருமே - னகார   ஈற்று
முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளி ஏற்கும், எ-று. 

(எ-டு.) மகன் - மகனே!  மருமகன் - மருமகனே!    என   வரும்.  ஐகார ஈற்று