நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   602
Zoom In NormalZoom Out


சுட்டு முதற்பெயர் போல (139) விளி கொள்ளா, எ-று. (25) 

145. நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்று
அம்முறை இரண்டும் அவற்றியல் பியலும்.
 

இதுவும் அது. 

(இ-ள்.) நும்மின் திரிபெயர் -‘நும்’ என்னும் சொல்லினது திரிபாகிய
‘நீயிர்’  என்னுஞ்  சொல்லும்,  வினாவின்  பெயர்-வினாப்  பொருளை
உணர நின்ற ‘யாவர்’ என்னுஞ் சொல்லும், என்று அம்முறை இரண்டும்
அவற்று     இயல்பு     இயலும்-     என்று     சொல்லப்பட்ட
அம்முறைமையினையுடைய     இரண்டு     சொல்லும்     முற்கூறிய
சுட்டுப்பெயர்போல விளி ஏலா, எ-று. 

ஏனைப்  புள்ளி’ (விளிமரபு  12) என்பதனுள்  ‘இர்’ ஈறு கோடலின்,
ஈண்டு ‘நீயிர்’ என்பதனை எடுத்தோதி விலக்கினார். (26) 

லகார ளகார ஈறு

146. எஞ்சிய இரண்டன் இறுதிப் பெயரே
நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.
 

இது, லகார ளகார ஈறு விளி ஏற்குமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)  எஞ்சிய  இரண்டன்  இறுதிப் பெயரே-உணர்த்தாது நின்ற
லகார  ளகாரம் என்னும் இரண்டு புள்ளியை இறுதியாக உடைய பெயர்,
ஈற்று  அயல்  நின்ற  நீட்டம்  வேண்டும்  - ஈற்று எழுத்துக்கு அயல்
நின்ற எழுத்து நீண்டு விளி ஏற்றல் வேண்டும், எ-று. 

(எ-டு.)  குரிசில் - குரிசீல்! ஏந்தல் -ஏந்தால்! தோன்றல்-தோன்றால்!
குழையள்-குழையாள்!   அணியள்-அணியாள்!  மக்கள்-மக்காள்!  என
வரும். (27) 

இயல்பு விளி

147. அயல்நெடி தாயின் இயற்கை ஆகும். 

இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. 

(இ-ள்.)  அயல் நெடிது ஆயின் இயற்கை ஆகும்-அவ்விரண்டீற்றுப்
பெயரும் ஈற்று அயல் எழுத்து நெட்டெழுத்து ஆயின் இயல்பாய் விளி
ஏற்கும், எ-று. 

(எ-டு.) ஆண்பால்! பெண்பால்! ஏமாள்! கோமாள்!  கடியாள்!  என
வரும். ‘நமர்காள்!’ என்பதும் அது. ‘நமரங்காள்!